கர்ப்பிணிகளே கவனம் ! இந்த 15 உணவு வகைகள் கருச்சிதைவை ஏற்படுத்தலாம்!

foods to avoid while pregnancy web

Image: Shutterstock

கர்ப்பமடைதல் என்பது இறைவன் பெண்களுக்கு அளித்த மிகப்பெரிய வரம். இதற்காக பலகாலமாக காத்திருக்கும் தம்பதிகளின் வலி என்பது எதனுடனும் ஒப்பிட முடியாதது. இறைவன் அளித்த எந்த ஒரு வரத்தையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

தாய்மை எனும் பேரன்பு நிலையை அடைய நீங்கள் கர்ப்பம் எனும் முதல் நிலையை அடைவது அவசியம். கர்ப்பமடைவது என்பது இப்போது சுலபமானதாக இல்லை. பல கடினங்களைத் தாண்டி கர்ப்பம் அடைந்தபின் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகளும் உண்டு, சாப்பிடக் கூடாத உணவு வகைகளும் உண்டு (1) .

சில உணவுகள் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் அபாய உணவுகள் என்பார்கள். அவற்றை பார்க்கலாம். உங்கள் கர்ப்ப காலத்தைக் கவனமாகக் காத்திடுங்கள்.

1. பைனாப்பிள்

பைனாப்பிள் என்பது மலிவாக கிடைக்கக் கூடிய ஒரு பழம். மிகவும் சுவையானதும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டதுமான இந்த பைனாப்பிள் கர்ப்பிணிகளுக்கு மட்டும் சற்று பாகுபாடு காட்டுகிறது. பைனாப்பிளில் உள்ள ப்ரோமெலைன் (bromelain) கருப்பை வாய் பகுதியை நெகிழச் செய்யும் தன்மை வாய்ந்தது. அதனால் உடனடி பிரசவ வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரம்ப கால கர்ப்பத்தின் போது சிறிதளவு பைனாப்பிள் மட்டுமே சாப்பிடுவது நல்லது. 7 முதல் 10 பைனாப்பிள்கள் முழுமையாக சாப்பிட்டால் கரு சிதைந்து கருப்பை வாயில் ரத்தம் வெளிப்பட ஆரம்பிக்கும். இதனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவரை அணுகவும் (2) .

2. எள் விதைகள்

ஆண்களின் உடலுக்கு அற்புத நன்மைகள் தரும் எள் விதைகள்தான் கர்ப்பிணிகள் உடலுக்கு சில சங்கடங்களையும் தருகிறது. எள் விதைகள் அல்லது எள் உருண்டை எனப்படும் இனிப்பு சேர்க்கப்பட்ட எள் உணவுகள் சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படலாம். வெள்ளை எள் அல்லது கருப்பு எள் இரண்டிலுமே இந்தத் தன்மைகள் உள்ளன (3).

3. ஈரல்

ஈரலில் விட்டமின் ஏ முழுமையாகக் கிடைக்கின்றன. மாதம் இருமுறை சாப்பிடுவதால் எந்தக் கெடுதலையும் இது தராது. ஆனால் அதே சமயம் வாரம் இருமுறை இப்படி சாப்பிடும்போது பெண்களின் உடலில் அதிக அளவில் ரெட்டினால் சுரக்கிறது (4) . இதனால் கருவில் உள்ள குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

4. பப்பாளி

அனேகமாக பெரும்பாலான திரைப்படங்களில் காட்டப்பட்ட ஒன்றுதான் இந்த பப்பாளி. பப்பாளிக்காய் அல்லது பாதி பழுத்த பப்பாளி, இதனை கரு உண்டான ஆரம்ப வாரங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கரு சிதைந்து விடுகிறது (5). ஒரு சிலருக்கு குறைப்பிரசவம் ஏற்படும். பப்பாளி விதையில் உள்ள ஒரு வகை என்சைம்கள் பிரசவ வலியை உடனடியாக ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தது.

5. மெர்குரி உள்ள மீன் வகைகள்

foods to avoid while pregnancy

Image: Shutterstock

கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது குழந்தை வளர்ச்சிக்கு நன்மை தரும் என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட மீன் வகைகளை அவர்கள் சாப்பிடக் கூடாது. கானாங்கெளுத்தி மீன் , சுறா மீன் மற்றும் மெர்குரி அதிகம் உள்ள சில மீன் வகைகளை (tilefish, swordfish, and bigeye tuna) அவர்கள் தவிர்க்க வேண்டும் (6). இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படலாம்.

6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்

உலகமயமாக்கப்பட்ட சந்தையில் இப்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகம் கிடைக்கின்றன. இது கர்ப்பிணிகளுக்குஆபத்தான உணவு என்பதால் இப்படியான உணவுகளை அவர்கள் தவிர்க்க வேண்டும். சாசேஜ் , ஸலாமி , டேலி மற்றும் பெப்பரோணி எனப் பலவித இறைச்சிகள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றைக் கர்ப்பிணிகள் உண்பதோ அல்லது பாதி வேக வைத்த இறைச்சி வகைகளை உண்பதோ கூடாது (7). காரணம் இவ்வகை இறைச்சிகளில் காணப்படும் பேக்டீரியாக்கள் கருச்சிதைவு , குறைப்பிரசவம் அல்லது குழந்தை இறந்து பிறத்தல் எனப் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

7. கடல் உணவுகள்

பெரும்பாலான கடல் உணவுகளில் மட்டி, சிப்பிகள், சஷிமி, சுஷி மற்றும் இறால்கள் போன்ற உணவுகளை மட்டும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் லிஸ்டீரியா எனப்படும் மாசு மூலம் பாதிக்கப்படுகிறது (8). கடல் வாழ் உயிரினங்களை உண்ணும்போது நன்றாக வேக வைத்து அதன் பின்னரே கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும்.

8. முளைத்த உருளைக்கிழங்கு

பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கை அதிகமாக வாங்கி வைத்திருப்பார்கள். அசைவமோ சைவமோ உருளைக்கிழங்கு என்பது எல்லா உணவுகளுடனும் பொருந்தும் ஒரு காய்வகை. பழைய உருளைக்கிழங்குகளில் பச்சை நிறத்தில் முளை விட ஆரம்பிக்கும். இவற்றை பலர் அந்த முளைத்த இடத்தைக் கீறி அகற்றி விட்டு மீண்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த முளைவிட்ட உருளைக்கிழங்குகளை கர்ப்பிணிகள் உண்டால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இவ்வகை உருளைக்கிழங்குகளை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் (9).

9. முளை விட்ட தானியங்கள்

முளை கட்டிய தானியங்களில் அதிக சத்து உள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனையே இந்தியர்களும் விரும்பி உண்கின்றனர். முளைகட்டிய தானியங்களில் , க்ளோவர், அல்பால்ஃபா, முள்ளங்கி மற்றும் முங் பீன் (clover, alfalfa, radish and mung bean) போன்ற முளைகட்டிய தானியங்களைக் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சால்மனல்லா ஒரு சில கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கலாம் (10). முளை கட்டிய தானியங்களைப் பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்.

10. கற்றாழை

foods to avoid while pregnancy

Image: Shutterstock

சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்தாக பார்க்கப்படும் கற்றாழையை கர்ப்பிணிகள் உணவாக சாப்பிடக் கூடாது. கற்றாழையில் உள்ள ஆந்த்ராக்வினோன் எனும் உட்பொருள் பிரசவ வலியை ஏற்படுத்தும். பெல்விக் ரத்தப்போக்கைஉண்டாக்கும். குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு போன்றவை ஏற்படும். சருமத்திற்கு கற்றாழை பயன்படுத்தலாம். தவறில்லை. ஆனால் கர்ப்பிணிகள் இதனை உணவாக உண்ணக் கூடாது (11).

11. நண்டு

கடல் நண்டு அல்லது ஆற்று நண்டு எதுவாக இருந்தாலும் கொழுப்பு அதிகமான இறைச்சி வகையாக நண்டு பார்க்கப்படுகிறது. இதில் கேல்சியம் அதிகமாக இருக்கிறது என்றாலும் இதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கருப்பையை சுருங்க செய்கிறது. இதனால் ரத்தப்போக்கு, கருச்சிதைவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். ஆகவே கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் (12).

12. காபி

எல்லாம் சரி ஆனால் கர்ப்பிணிகள் காபி கூடவா குடிக்க கூடாது என்று யோசிக்கத் தோன்றும். உண்மையில் அளவான முறையில் காபி குடிக்கும் கர்ப்பிணிகளுக்கு எந்த தீங்கும் நேராது. ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் இருக்கலாம். அளவுக்கதிகமாக காபி குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு குறைந்த எடை உள்ள குழந்தை அல்லது கருச்சிதைவு போன்றவை நடக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காபியில் உள்ள கஃபைன் எனப்படும் மூலப்பொருள் சில சாக்லேட்டுகள் மற்றும் தேனீர் வகைகளிலும் உள்ளது (13). அவற்றையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

13. மசாலா பொருள்கள்

சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் சில மசாலா பொருட்கள் கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பெருங்காயம், வெந்தயம், பூண்டு போன்றவற்றை கர்ப்பிணிகள் அளவாக சாப்பிட வேண்டும். இந்த உணவுகள் கர்ப்பப்பையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் கருச்சிதைவு போன்ற தீங்குகள் ஏற்படலாம். இந்த உணவுகள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது என்பதால் கர்ப்ப நேரத்தில் இந்த உணவுகளைத் தவிர்க்கலாம் அல்லது குறைத்து கொள்ளலாம்.

14. மது

இன்றைய நவீன பெண்கள் பலருக்கும் மது அருந்துவது சாதாரண விஷயம் போல இருக்கிறது. பார்ட்டிகளில் மது அருந்தாதவர்கள் தவறானவர்கள் போல பார்க்கப்படுகிறார்கள். அதனால் தற்போதைய பெண்கள் தவிர்க்க முடியாமல் மதுவினை அருந்த நேரிடுகிறது. கர்ப்பிணிகள் மதுவை தவிர்க்க வேண்டும் (14). கர்ப்பிணிகள் மது அருந்துவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். பெண்களுக்கு எடை அதிகரித்தல், நீரிழிவு நோய் ஏற்படுதல் இதய நோய் போன்றவை கர்ப்பமடைந்திருக்கும் காலங்களில் நேரலாம். ஆகவே கர்ப்ப காலங்களில் மதுவினைத் தவிர்க்கவும்.

15. பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனிகள்

foods to avoid while pregnancy

Image: Shutterstock

காற்றடைத்த பைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகள் உங்களுக்கு எந்த புரத சத்துக்களையும் வழங்குவதில்லை. மாறாக கொழுப்பு அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை போன்றவைதான் உங்கள் உடலுக்குள் செல்கின்றன. கர்ப்ப காலத்தில் உடல் எடையை சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். அதனால் இந்த நேரங்களில் அதிக நொறுக்குதீனிகளைத் தவிர்ப்பது சிறந்தது (12) .

References: