Image: Shutterstock
ஒரு காலத்தில் பலரது பால்ய பருவங்கள் காமிக் புத்தகங்கள் படிப்பதன் மூலமே கழிந்தது என்றால் மிகை இல்லை. ஆனால் தமிழில் தற்போது காமிக் புத்தகங்களின் வரவு மிகக் குறைவாகவே இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு காமிக் புத்தகங்களை விட அனிமேஷன் திரைப்படங்கள் பிடித்துப் போயிருப்பதால் இந்த நிலை.
எனினும் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை மட்டும் நிறுத்தி விடக் கூடாது. திரைப்படம் பார்ப்பதைக் காட்டிலும் படங்கள் கொண்ட கதைகளைப் படிப்பதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும் என்கிறது உளவியல். ஆகவே உங்கள் பிள்ளைகளின் பால்யம் சுகமானதாக இருக்க கீழ்க்கண்ட காமிக் புத்தகங்களை வாங்கிப் பரிசளியுங்கள்.
பொன்னியின் செல்வன்
இந்தப் புத்தகம் பற்றிய முன்னுரை உங்களுக்கு தேவையே இல்லை. சோழர்களின் பெருமையை சொல்லும் இந்த தமிழ் காமிக் புத்தகம் உங்கள் பிள்ளைகள் கையில் தவழ வேண்டும். இப்போது வரலாறு பற்றிய ஆர்வங்களை பிள்ளைகளிடம் விவரித்து விட்டால் பின்னர் உங்கள் குழந்தை வளரும்போது தானாகவே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பார்.
கல்கியின் பொன்னியின் செல்வன்
இந்தப் புத்தகம் பொன்னியின் செல்வன் கதையை பாகம் பாகமாக விரிவான முறையில் சொல்ல முற்படுகிறது. இப்புத்தகம் பொன்னியின் செல்வன் கதையின் முதல் பாகத்தை உள்ளடக்கியது. 380 பக்கங்கள் கொண்டுள்ளது. இதில் இன்னும் விரிவாக பொன்னியின் செல்வன் கதை படங்களுடன் சொல்லப்படுகிறது என்பது இதன் சிறப்பம்சம்.
பரமார்த்த குரு கதைகள்
சிறுவர்களை சிரிக்க வைக்க கூடிய நகைச்சுவை உணர்வு பற்றிய புரிதல்களை அவர்களுக்குள் விதைக்கக் கூடிய வகையில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எல்லாக் கதைகளுமே வேடிக்கையானவை. பொழுது போக்க உகந்தவை. இந்த விடுமுறைக்கு உங்கள் பிள்ளைகளுக்கு இந்த புத்தகத்தை பரிசளியுங்கள்.
அக்பர் பீர்பால் கதைகள்
நமது குழந்தைப் பருவம் அக்பர் பீர்பாலின் கதைகள் இல்லாமல் முழுமை பெற்றிருக்காது. பீர்பால் அக்பரின் மதியூகி. மன்னர் அக்பருக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கு சாமர்த்தியமான முறையில் பதில் தருவதில் வல்லவர் பீர்பால். நகைச்சுவையும் உளவியல் நுணுக்கங்களும் அறமும் இந்தப் புத்தகத்தில் நிறைந்து கிடக்கின்றன.
இனி எல்லாம் மரணமே
மர்ம மனிதன் மார்ட்டின் இதன் நாயகனாக இருக்கிறார். ஒரு விறுவிறுப்பான மர்ம கதையை படங்கள் கோர்த்து காமிக் பாணியில் தந்திருக்கிறது லயன் காமிக்ஸ் நிறுவனம். உங்கள் வளர்ந்த பிள்ளைகளின் விடுமுறை நேரங்கள் சுவாரஸ்யமாகக் கழிய இந்தப் புத்தகத்தை பரிசளியுங்கள்.
பரலோக பாதை பச்சை
இதுவும் விறுவிறுப்பான மர்மம் ஒன்றை சொல்லக் கூடிய காமிக் கதைதான் என்பதை அட்டைப்படம் சொல்கிறது. லயன் காமிக்ஸ் தான் இந்த புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. குழந்தைகளின் கற்பனை திறனை அதிகரிக்க இந்த புத்தகத்தை பரிசளியுங்கள்.
மனதில் மிருகம் வேண்டும்
ஒரு வித்யாசமான உளவியல் கதையை உங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவி செய்கிறது. லயன் காமிக்ஸ் இதனை வெளியிட்டிருக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்கு இதனைப் பரிசளிப்பதன் மூலம் அவர்களின் கலைத்திறனை வளர்க்க முடியும்.
ஈரோட்டில் இத்தாலி
கவ்பாய் கதைகள்தான் நமது பால்யத்தை சிறப்பானதாக மாற்றி இருந்தது என்றால் அது மிகை இல்லை. ஆளுக்கொரு கற்பனை துப்பாக்கி வைத்துக் கொண்டு டிஷ்யூம் டிஷ்யூம் என சுட ஆரம்பித்தது இந்த கவ்பாய் காமிக்ஸ் வந்த பிறகுதான். அந்த சந்தோஷத்தை உங்கள் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
காப்டேன் பிரின்ஸ் ஸ்பெஷல்
இந்த காமிக்ஸ் கதை பாலைவனத்தில் நடக்கிறது. பாலைவனத்து மக்களை காக்கும் நாயகனை அடிப்படையாக கொண்ட கதை. இதனை உங்கள் குழந்தைகளுக்கு பரிசளித்து அவர்களின் ஆச்சர்யங்களை உங்கள் பரிசாக மாற்றிக் கொள்ளுங்கள்.
ரிப்போர்ட்டர் ஜானி
துப்பறியும் கதைகள் இல்லாமல் காமிக் புத்தகங்களா ! இருக்கவே முடியாது என வெளியாகி இருக்கிறது இந்த காமிக் கதை. விறுவிறுப்பும் மர்மமும் நிறைந்த இந்த புத்தகம் உங்கள் குழந்தைகளின் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கக் கூடியது.