உடனடியாக கருத்தரிக்க விரும்புகிறீர்களா.. இதுவரை யாரும் சொல்லாத ரகசிய முறைகள் உங்களுக்காக !

உடனடியாக கருத்தரிக்க விரும்புகிறீர்களா.. இதுவரை யாரும் சொல்லாத ரகசிய முறைகள் உங்களுக்காக !

Image: Shutterstock

IN THIS ARTICLE

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் குழந்தை மீது ஆசை வந்துவிட்ட பின்னர் அதற்கான காத்திருப்பு என்பது மிகவும் அவஸ்தையானது  தான் இல்லையா ? அதற்காக ஆன்லைனில் வெளியாகும் அத்தனை குறிப்புகளையும் தேடித் தேடிக் களைத்துப் போயிருப்பீர்கள்.

குழந்தை வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்த பின்னர் முதலில் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து அவரிடம் அறிவுரை கேட்பது அவசியமானது. கர்ப்பம் தரித்த பின்னர் தானே மகப்பேறு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று நீங்கள் தயங்க வேண்டாம்.

ஒரு மகப்பேறு மருத்துவர் பல ஆரோக்கியமான தேர்வுகளை உங்களுக்கு பரிந்துரைக்க முடியும் மற்றும் எந்தவொரு மருத்துவ சிக்கலும் உங்கள் கர்ப்பத்திற்கு இடையூறாக இருக்காது என்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

எப்படி இருப்பினும் விரைவில் குழந்தைப் பேறு அடைய சில ரகசிய உதவிக்குறிப்புகள் உள்ளன. அவை அதிகம் பேர் அறிந்திராத ரகசியக் குறிப்புகள். அந்த உதவிக்குறிப்புகளில் சிலவற்றை நாங்கள் உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறோம். இந்தக் குறிப்புகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களால் பரிந்துரை செய்யப்பட்ட குறிப்புகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம் (1).

கரு முட்டை  கிட் பயன்படுத்தலாம்

உங்கள் உடலில் லுடினைசிங் ஹார்மோன்களின் அளவை அளவிட, நீங்கள் கடைகளில் கிடைக்கும் கருமுட்டை கணக்கிடும் கிட் வாங்கலாம். கருமுட்டை வெளியாகும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் உங்கள் லுடீனைசிங் ஹார்மோன்கள் உயரும். சரியான நேரத்தில் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நீங்கள் இந்தக் கிட்டைப் பயன்படுத்தலாம் (2). இதன் மூலம் நீங்கள் விரைவாக கர்ப்பமாக முடியும். கருமுட்டை  கிட்டில் நேர்மறையான சோதனை முடிவைப் பெற்ற பிறகு உடலுறவு கொள்ள சரியான நேரம் பொதுவாக மூன்று நாட்கள்  அல்லது அதற்கும் மேற்பட்டதாகக் கருதப்படுகிறது.

நல்ல கொழுப்பு – குழந்தைப்பிறப்பிற்கும் நல்லது

ஹ்யுமன் ரிப்ரொடக்க்ஷன் (மனித இனப்பெருக்கம்) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் கருமுட்டைகள் சேராததால் கருவுறாமை (3) இடையே ஒரு தொடர்பு கண்டறியப்பட்டது. கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் குடிக்கும் பெண்கள் முழு கொழுப்புள்ள பால் குடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் கருமுட்டை தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கருத்தரிக்க முயற்சிக்கும்போது, ​​நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களுடன் நட்பாக இருப்பது அவசியம். கொழுப்புகள் உங்கள் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருப்பதாகவும், மாதவிடாய் சுழற்சியை நிர்வகிக்கும் ஹார்மோன்களுக்கான முன்னோடி என்றும் கூறப்படுகிறது (4).

கருமுட்டை வெளிவரும் காலம் மட்டுமே கலவிக்கான காலம் அல்ல

கருமுட்டை வெளியாகும் நாட்களைக் கணக்கு வைத்து உடல் உறவு கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பினை விரைவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக அந்த நாட்களுக்காக மட்டுமே காத்திருக்காமல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் துணையை மற்ற நாட்களிலும் மகிழ்வித்திருங்கள். அன்போடு கூடுங்கள். கருமுட்டை வெளியாகும் காலத்திற்கு முன்னும் பின்னும் ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்டால் அது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

சுகம் தரும் லூப் விஷயத்தில் கவனம் தேவை

கலவி என்பது ஆண் பெண் இருவரின் பரஸ்பர அனுமதியோடு நடக்க வேண்டிய ஒரு விஷயம். அந்த நேரங்களில் பெண்ணின் உறுப்பில் உராய்வுகள் வலி ஏற்படுத்தாமல் இருக்கவும் அதிக நேர இன்பம் நீடிக்கவும் ஒரு சில ஆண்கள்/பெண்கள் லூப் எனப்படும் வழவழப்பான மருத்துவ எண்ணெயை தங்கள் உறுப்பில் பயன்படுத்துவார்கள். அது பலருக்கு விந்தணுவை தாமதிக்கும் சில சமயங்களில் விந்தணு குறைபாடுகளுக்கும் காரணமாகலாம் (5). (வெகு சில அரிய சந்தர்ப்பங்களில் மட்டுமே). விந்தணுவை பலவீனப்படுத்தாத லூப் மட்டுமே தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். முக்கியமாக லூப் இல்லாமலும் உங்களால் உடல் உறவு கொள்ள முடியும் என்றால் அதனையே முயற்சிக்கவும்.

அதிக முறை கலவி என்பது குழந்தைப் பிறப்பை தாமதம் செய்யும்

கருமுட்டை வெளியாகும் நாட்களுக்காக காத்திருந்து கலவி கொள்வதால் ஒரு சிலர் அதே நாளில் பல முறை உடல் உறவில் ஈடுபடுவார்கள். இது உங்கள் விந்தணுவின் அடர்த்தியை நீர்த்துப் போக செய்து விடும். இதனால் குழந்தைப் பிறப்பு தள்ளிப் போகலாம் (6). எனவே குறைவே நிறைவு என்பதே இந்த இடத்தில் சரியான மந்திரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருமுறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அந்த நாட்களில் உடல் உறவு கொள்வது ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கு வழி வகுக்கும்.

மது மற்றும் காபி நுகர்வினைக் கவனிக்கவும்

மது உடல் நலத்திற்கு மட்டுமல்ல குழந்தை பிறப்பு ஏற்படும் சமயங்களிலும் தீங்கு விளைவிக்கும் (7). ஆகவே குழந்தை விரைவாக வேண்டும் என்று விரும்பினால் முடிந்த வரை மதுவில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். அதனைப் போலவே காஃபி அருந்துவது என்பதும் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் கஃபைன் எனப்படும் மூலப்பொருள் குழந்தைபிறப்பில் சிக்கல் ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன (8). ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து கப் காஃபி பருகுகிறீர்கள் எனில் உங்கள் குழந்தைக்காக அதனை ஒருமுறையாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பம் தரிப்பதற்கான சிறந்த நிலைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

கரு உருவாவதற்கான உடல் உறவு நிலைகள் குறித்து பல கட்டுக்கதைகள் உலவி வருகின்றன. அவற்றை பற்றி யோசித்து கவலையடைய வேண்டாம். வழக்கமான நிலையை விட அதற்கு நேர் எதிரான பெண் மேல் இருக்க ஆண் கீழிருக்கும் நிலைகளால் குழந்தை பிறப்பு ஏற்படும் என்பதும் அந்த கட்டுக் கதைகளில் ஒன்றுதான் .

பெண்ணின் கருப்பை வாய் அமைந்திருக்கும் நிலையால் எப்போதேனும் அரிதாகவே சில உடல் உறவு நிலைகளால் கருத்தரிக்கலாம் என வெளிநாட்டு மருத்துவர் கோல்டுபார்ப் தெரிவிக்கிறார். ஒரு சில உடல் உறவு நிலைகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதால் விந்தணுக்கள் விரைவாக பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறுகின்றன . உட்கார்ந்த நிலை மற்றும் நின்ற நிலை போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.

கலவிக்கு பின்னர் அசைய வேண்டாம்

ஒருவேளை இதனை நீங்கள் கேட்டிருக்கலாம். கலவிக்கு பின்னர் உங்கள் கால்கள் மேலே பார்த்தவாறு படுத்திருந்தால் ( 90 டிகிரி கோணம் ) ஆணின் விந்தணு உங்கள் கருப்பை உடன் சேரும் வாய்ப்பு இருப்பதாக சொல்லி இருப்பார்கள். நிச்சயம் அது உண்மையல்ல.

உடல் உறவு முடிந்த பின்னர் 10 முதல் 15 நிமிடம் வரை படுத்திருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக கால்களை மேலே தூக்கி வைத்தபடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நேரங்களில் சிறுநீர் கழிக்கவோ அல்லது பிறப்புறுப்பை சுத்தம் செய்யவோ உடனடியாக எழாமல் அமைதியாக படுத்திருந்தால் உங்கள் கருப்பை வாய் உங்கள் ஆணின் விந்தணுவை ஏற்றுக் கொள்ளத் தயார் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனதை லேசாக மாற்ற விருப்பமானதை செய்யுங்கள்

குழந்தை பிறக்குமா பிறக்காதா குழந்தை பிறந்த உடன் குடும்பத்தை எப்படி சமாளிப்பது என்பது போன்ற பல கவலைகளால் உங்கள் மனதை நிரப்பாமல் உங்கள் மனதை லேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுங்கள். அமைதியாக இருந்தால் அதுவாகவே நடக்கும் என்பதை நம்புங்கள். மன அழுத்தம் கருமுட்டை வெளியேறுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன (9). இசை, புத்தகம், ஆன்மிகம் என உங்களுக்கு விருப்பமான விஷயங்களைத் தொடருங்கள். மனதை லேசாக்குங்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்

இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை என்பது எப்போதுமே ஆரோக்கியமான ஒன்று. நமது மரபணுக்கள் அங்கிருந்து தான் ஆரம்பித்திருக்கின்றன என்பதை மறவாதீர்கள். ஆர்கானிக் உணவுகளை கணவன் மனைவி இருவருமே அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் (10). அளவான உடற்பயிற்சி நன்மை தரும். அளவுக்கதிகமான உடற்பயிற்சி ஒரு சில நேரங்களில் உங்கள் கருமுட்டை வெளியாகும் நேரத்தை மாற்றி அமைத்து விடலாம். விரைவில் மாதவிலக்கு ஏற்படலாம். எனவே அளவான முறையில் உடல்பயிற்சி செய்யுங்கள். புகைபிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை விட்டு விடலாம். இப்படியான சில ஆரோக்கிய விஷயங்களை முன்னெடுங்கள். விரைவில் விரும்பிய வண்ணம் குழந்தையைப் பெற்றெடுங்கள் !

References