உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தமிழை அறிமுகம் செய்ய அவசியமான தமிழ் பழக்கும் புத்தகங்கள்

Image: Shutterstock

இன்றைய கான்வென்ட் குழந்தைகளுக்கு தமிழ் என்கிற மொழியின் மகத்துவத்தை கற்பிக்க வேண்டியது அவசியமாகிறது. தமிழைத் தாய் மொழியாக கொண்ட பெற்றோர்களுக்கு அதற்கான பொறுப்பும் கடமையும் இருக்கிறது. வளரும் குழந்தைகள் தமிழைத் தடையில்லாமல் பேசவும் எழுதவும் கற்று கொடுக்க சில புத்தகங்கள் உதவி செய்கின்றன.. அவற்றின் பட்டியலை இங்கு பார்க்க போகிறோம். அவசியம் தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது பெற்றோர்களாகிய உங்களின் கடமையாகும்.

எழுத்துப் பயிற்சி புத்தகம் – 5 எண்ணிக்கை

குழந்தைகளுக்குத் தமிழைப் பிழையின்றி எழுதவும் தமிழில் அழகிய கையெழுத்து பெறவும் இந்த புத்தகத்தை நீங்கள் வாங்கி கொடுக்கலாம். ஐந்து புத்தகங்கள் ஒன்றாக கிடைப்பதால் எழுத்து அற்புதமாக வர ஒரு நல்ல பழக்கமாக இதனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

சிறுகுழந்தைகளுக்கான இணைகோ எழுத்து பயிற்சி புத்தகம்

உங்கள் கிண்டர் கார்டன் குழந்தைகள் தமிழைச் சரியாக எழுத நீங்கள் இணைகோவின் இந்த புத்தகத்தை வாங்கலாம். மூன்று புத்தகங்கள் கிடைக்கிறது. உயிர் எழுத்துக்கள் , மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் போன்றவற்றைப் பிழையில்லாமல் கற்றுக் கொள்ள முடியும்.

மழலைகளுக்கான அரிச்சுவடி புத்தகம்

பள்ளி செல்வதற்கு முன்பான காலங்களில் உங்கள் மழலைகளுக்கு தமிழின் அரிச்சுவடியைக் கற்றுக் கொடுங்கள். வண்ணமயமான இந்த புத்தகத்தில் குழந்தைகள் ஆசையாய் தமிழை விரும்பிப் படிக்க ஏதுவாக படங்களுடன் பாடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏக்தாலி தமிழ் அரிச்சுவடி

குழந்தைகள் படங்களுடன் இணைந்த எழுத்துக்களை விரைவாகக் கற்றுக் கொள்கின்றன என்கிறது உளவியல். அதற்கேற்ப படங்களுடன் தமிழ் அரிச்சுவடியை அவர்கள் படிக்க இந்த புத்தகம் ஏற்றது.

பாலர்பள்ளி புத்தகம்

குழந்தைகள் தமிழைச் சிரமம் இல்லாமல் படிக்க இந்த புத்தகம் உதவி செய்கிறது. பள்ளி செல்வதற்கு முன்பான பாலர்பள்ளிக் காலங்களில் இந்த புத்தகத்தை வாங்கி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவர்களை அற்புதமான குழந்தைகளாக வகுப்பில் திகழ செய்யும்.

MY BIG BOARD BOOK NUMBERS

குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த புத்தகம் காடுகள் மற்றும் அவற்றில் வாழும் விலங்குகள் பற்றிய அத்தனை விபரங்களையும் சொல்லிக் கொடுக்கிறது. அதனைக் கதை வடிவில் சொல்லிக் கொடுப்பதால் குழந்தைகளின் ஞாபகங்களில் அது எப்போதும் நிலைத்திருக்கிறது என்பது இதன் சிறப்பம்சம்.

சுதீஷ் வீசிய பந்து

குழந்தைகள் அவர்கள் கற்பனையில் உதித்த கதைகளை அவர்கள் பிஞ்சுக் கைகளால் எழுத அதற்கு பரிசும் கொடுத்து அந்தக் கதைகளையே புத்தமாகவும் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகளிடம் பக்குவமாக நடந்து கொண்டால் அவர்கள் எதிர்காலத்தில் ஒளி வீசி பறக்கும் சுதந்திர பறவைகளாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்கிறது இந்த புத்தகம்

ஆயிரம் பயனுள்ள வார்த்தைகள்

இது சற்றே வளர்ந்த சிறுவர்களின் தமிழ் அறிவு வளர வடிவமைக்கப்பட்ட புத்தகம். இதில் இரண்டு மொழிகளில் சொற்கள் கூறப்பட்டுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இது வெளியாகி இருக்கிறது. அதனால் ஆங்கில வார்த்தைகளுக்குண்டான தமிழ் சொற்களை சிறுவர் சிறுமியர்கள் எளிதில் கற்க முடியும்.

தமிழ் உயிர்/ஆயுத எழுத்துக்கள்

பாலர் பள்ளிக்கு செல்லும் மழலைக் குழந்தைகளுக்கான உயிரெழுத்துக்களை இந்த புத்தகம் கற்பிக்கிறது. எழுத்து பயிற்சிக்கான இன்னுமொரு சிறப்பு புத்தகம். இது உங்களின் குழந்தைகளின் கையெழுத்தையும் தமிழ் அறிவையும் மேம்படுத்துகிறது.

படம் பார்த்து பாடம் கற்க


பாலர்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகம் . இதில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கு ஏற்ப அதற்கான படம் அச்சு செய்யப்பட்டிருக்கும். அதனை மூலம் குழந்தைகள் தமிழை எளிதாக கற்றுக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகள் புத்தகத்தை கிழிக்க முடியாதபடி லேமினேட் செய்யப்பட்டுள்ளது.

Was this information helpful?
thumbsupthumbsdown
The following two tabs change content below.

    LATEST ARTICLES