ஆகச்சிறந்த தகப்பன்களுக்கு அவசியம் சொல்லியாக வேண்டிய தந்தையர் தின வாழ்த்துக் குறிப்புகள்

Father's Day Greetings That Awesome Dads Need To Say

iStock

உங்களுக்குத் தெரியுமா  1910 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி வாஷிங்டனில்தான் முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர் சோனாரா டாட் என்ற பெண்தான் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா! Fathers day quotes in tamil

உண்மைதானே நாம் உருவாக இரண்டு க்ரோமோசோம்கள் தேவை.. அவற்றில் ஒன்றை நமக்கு பரிசளிக்கும் தந்தையை நாம் இன்னும் பெரிதாகக் கொண்டாட வேண்டாமா !

நம் உயிர் உருவாக காரணமாக இருந்தவர் நம் தந்தை. நம் பெயருக்கு முன் நம்மைக் காத்து நிற்கும் காவல் தெய்வம் நம் தந்தை. பிறர் வாழ தன்னை உருக்கிய சுடர் நம் தந்தை.

என்ன நடந்தாலும் நம்மோடு உடன் வந்த ஒரே மனிதர் நம் தந்தை.. இப்படி அப்பாக்களை பற்றிச் சொல்ல ஆயிரம் கோடி விஷயங்கள் இருக்கிறது.

அன்றாடம் நம் உடை முதல் உறங்க போகும் உறக்கம் வரை ஒவ்வொன்றுக்கும் தேவையானவற்றை தேடித் தேடி சம்பாதித்து தரும் நம் தகப்பனை நாம் கொண்டாடும் நாள் தான் தந்தையர் தினம். Dads little princess

இந்த நாளில் நீங்க உங்கள் தந்தைக்கு எப்படி வார்த்தைகள் கோர்த்து வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று கவலைப்படுகிறீர்களா .. உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்.

அப்பாக்களுக்கான வாழ்த்து மடல் வார்த்தைகள்

Greeting card words for dads

iStock

 1. எத்தனை செல்வங்கள் வந்தாலும் உன் விரல் தந்த  ஆதரவு போல் எதுவும் இல்லை தந்தையே
 2. விடு விடு என வாழ்க்கை முழுவதும் விட்டு கொடுக்கும் பெரிய உள்ளம் கொண்ட என் தந்தையே
 3. மழலையில் நடை பழக்க கைபிடித்து செல்லும் பாதையில் வாழ்வை அமைத்து சென்ற அப்பாவை நினைவில் கொள்வோம்.
 4. மழலையின் சிரிப்பில் தன்னை மறந்து அதன் பொருட்டாக தியாகியான அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
 5. தன்னலம் அற்ற உணர்வுகளை என் நலம் காக்க ஏற்றுக் கொண்டவர் என் அப்பா Love you appa

அப்பாவின் மீதான நம் அன்பை இப்படியும் சொல்லலாம்

The same can be said of our love for Dad

iStock

 1. அம்மா என்னை மார்போடு அணைத்து கொஞ்சினாலும் என் அப்பாவான உங்கள் தோள்களில் கிடைக்கும்  ஆனந்தமே  தனிதான்
 2. தந்தை மீண்டும் குழந்தை ஆவது தன் பிள்ளை தன் மீது ஏறி அமர்ந்து விளையாடும் சமயங்களில் தான்.
 3. அப்பா .. ! நான் மீண்டும் குழந்தையாக மாறி உன் அன்பின் அரவணைப்பில் மிதந்து கிடைக்க ஆசை.
 4. தத்தை நடையில் உன்னுடன் ஓடி விளையாடிய நாட்கள் இன்னும் என்னுள் சந்தோஷ நினைவுகளாய் இருக்கிறது அப்பா
 5. என் மழலை பருவத்தில் நாம் மாங்காய் அடித்து, அம்மாவிற்குத் தெரியாமல் அடுக்கரையில் திண்பண்டம் திருடி என நாம் அடித்த லுட்டிகள் நம் நாட்களை சிறப்பாக்குகிறது !. Funny fathers

நம் வாழ்வின் ரியல் ஹீரோ அப்பா

Dad is the real hero of our lives

iStock

 1. நம்மிடம் மற்றவர் காட்டும் நேசம் கண்டிப்பாக ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் நம் நலனை மட்டுமே எதிர்பார்க்கும் ஒரே ஒரு இதயம் நம் அப்பாவினுடையது Dad is our real hero
 2. அப்பாவின் கடல் அளவு கோபம் தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளைக் கண்டவுடன் ஒரு நொடியில் அடங்கி விடுகிறது
 3. நான் இறைவனிடம் கேட்டேன், என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் வேண்டும் என்று …கடவுள் சொன்னார் இது பேராசையின் உச்சம் என்று !.
 4. எனக்கு அப்பாவாக மாறவே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை தன் கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல “அப்பா”.
 5. முதன் முதலில் பெண் மனதில் உண்டாகும் காதல் அவளுடைய அப்பாவின் மீது மட்டுமே இருக்கும் .

அப்பாக்களைப் பற்றிய பிரபலங்களின் வார்த்தைகள்

Celebrity words about dads

iStock

 1. என்னை ஜெயிக்க வைக்க என் அப்பா பலமுறை தோற்று போயிருக்கிறார் – விஜய் Actor Vijay
 2. என் வாழ்வின் முதல் அத்யாயம் என் அப்பா  – சிம்பு Actor Simbu
 3. என் தந்தை என் கடவுள் – சிவகார்த்திகேயன் Actor Sivakarthikeyan
 4. அப்பா தான் என் நிரந்தர நம்பிக்கை  – நீயா நானா கோபிநாத். Anchor Gopinath
 5. அப்பா தந்த நம்பிக்கைதான் என் நடிகை வாழ்வு – ராதிகா Actress radhikaa

தாயில் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை – எப்போதும் இறை உணர்வோடு இருக்கும் நம் முன்னோர்கள் இறைவனுக்கு நிகராக நம் பெற்றோர்களை வைத்திருந்தனர். எந்த எதிர் கேள்விகளும் இல்லாமல் அவர்கள் இட்ட பணியை நிறைவேற்றிய பல முன்னோர்கள் குணம் இப்போதெல்லாம் அரிதாகவே காணப்படுகிறது.

காலத்தின் போக்கில் நம் நண்பனாகிப் போன நம் அப்பாவின் வாழ்வை இன்னும் அதிகமாக அனுதினமும் ப்ரியங்களால் நிறைப்போம்.