5 மாத கர்ப்ப அறிகுறிகள்

✔ Research-backed

MomJunction believes in providing reliable, research-backed information to you. As per our strong editorial policy requirements, we base our health articles on references (citations) taken from authority sites, international journals, and research studies. However, if you find any incongruencies, feel free to write to us.

In This Article

கர்ப்ப காலம் என்றாலே, அச்சமயத்தில் பெண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டியது அவசியம்; பெண்களுக்கு ஏற்படும் பத்து மாத கர்ப்ப காலத்தை மூன்று பிரிவுகளாக, அதாவது மூன்று 3 மாத காலமாக பிரிக்கலாம். இவ்வாறு கர்ப்ப காலத்தில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும் கால கட்டத்தை ஆங்கிலத்தில் Trimester அதாவது ட்ரைமெஸ்டர் என்று கூறுவர்; முதல் மூன்று மாத காலத்தை – முதல் ட்ரைமெஸ்டர் என்றும், இரண்டாம் மூன்று மாத காலத்தை – இரண்டாம் ட்ரைமெஸ்டர் என்றும், மூன்றாம் மூன்று மாத காலத்தை – மூன்றாம் ட்ரைமெஸ்டர் என்றும் கூறுவர்.

ஐந்தாம் மாத கர்ப்ப காலம், இரண்டாம் ட்ரைமெஸ்டர் பிரிவை சார்ந்தது. ஐந்து மாத கர்ப்ப காலத்தில், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு வளர்ச்சியடைவதை நன்கு அறிந்து கொள்ளலாம்; இந்த கால கட்டத்தில் தான், பெண்களுக்கு வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும். இந்த இரண்டாம் ட்ரைமெஸ்டரின் பொழுது கர்ப்பிணி பெண்கள் தங்களது ஆடை, அணிகலன்களை மாற்றி அமைக்க வேண்டி வரும்; மேலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலங்களில் ஏற்பட்ட காலை பலவீனங்கள் முடிவுக்கு வந்து உணவு பொருட்களின் மீதான ஆவல், பெண்களின் மனதில் மேலெழும்.

இங்கு MomJunction வழங்கும் இப்பதிவில் 5 மாத கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள், குழந்தை வளர்ச்சி நிலைகள் மற்றும் உணவு முறை குறிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஐந்து மாத கர்ப்ப காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?

கர்ப்பிணி பெண்கள், ஐந்து மாத கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் முக்கிய அறிகுறிகள் என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது (1, 2):

  • உடல் எடை அதிகரித்தல்: இது நிச்சயம், BMI எனும் உடல் எடை குறியீட்டு எண்ணை பொறுத்து அமையும் (3).
கர்ப்ப கால மாதம்BMI < 25BMI 25-30BMI > 30
5 ஆவது2-4 கிலோ கிராம்1-2 கிகி – 2 கிகி0-2 கிகி – 1-2 கிகி
  • புவி ஈர்ப்பு மாற்றங்கள்: கர்ப்பிணிகளின் வயிறு வளர்வதற்கு ஏற்ப, அவர்தம் உடலில் புவி ஈர்ப்பு மாற்றங்களும் நிகழும்; இதனால், கர்ப்பிணிகள் சில சமயங்களில் சமநிலையற்று உணரலாம்.
  • மூச்சுத்திணறல்: கர்ப்பிணிகளின் வயிற்றில் ஏற்படும் குழந்தையின் வளர்ச்சியால், கருவறை உதரவிதானத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்; இதனால், பெண்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் உண்டாகலாம்.
  • சோர்வு: கர்ப்பிணி பெண்களின் உடல், அவர்தம் உடலுக்கு உழைப்பதோடு – அவர்களுள் வளரும் குழந்தைக்காகவும் சேர்ந்து உழைக்க தொடங்கும்; இதனால் கர்ப்பிணிகள் களைப்பாக உணரலாம்.
  • தலை சுற்றல்: உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகளுக்கு தலை சுற்றல் ஏற்படலாம்.
  • கால் தசைப்பிடிப்புகள்: வைட்டமின் சத்துக் குறைபாடு, அதிக உடல் எடை அல்லது அளவுக்கு அதிகமாக சுறுசுறுப்புடன் இருத்தல் அல்லது அளவுக்கு அதிகமாக சோம்பேறியாக இருத்தல் முதலிய காரணங்களால், கர்ப்பிணிகளுக்கு கால்களில் தசைப்பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு(4).
  • மூக்கடைப்பு: கர்ப்பிணிகளின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்; அது நாசி சவ்வுகளை விரிவடைய செய்து, சளித்திரவத்தின் ஓட்டத்தை அதிகரித்து, மூக்கடைப்பை ஏற்படுத்துகிறது.
  • மலச்சிக்கல்: கர்ப்பிணி பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரான் அளவு அதிகரிப்பதால், குடல் பகுதியில் உணவு இயக்கம் மற்றும் செரிமானம் மெதுவாக நடைபெறுகிறது. இதன் காரணமாக முழுகாமல் இருக்கும் பெண்களின் உடலில் செரிமான குறைபாடு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • நெஞ்செரிச்சல்: கர்ப்பமாக இருக்கும் பெண்களின் கருப்பை மேல்நோக்கி வளர்வதால், அது வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களை உணவுக்குழாய் நோக்கி தள்ளுகிறது; இது அவர்களில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.
  • முதுகு வலி: கர்ப்பமாக இருக்கும் பெண்களின் வயிற்றில் வளரும் கருவின் எடையால், கர்ப்பிணிகளின் கீழ் முதுகில் அல்லது சையடிக் நரம்பில் (முதுகுத்தண்டிலிருந்து கால்களுக்கு செல்லும் நரம்பு) அதிகப்படியான அழுத்தம் ஏற்படலாம். இக்காரணத்தால் கர்ப்பிணிகள் முதுகு வலியை அனுபவிக்க நேரிடலாம்.
  • பசி ஆர்வத்தை அதிகரிக்கும்: இந்த மாதத்தோடு காலை பலவீன குறைபாடு முடிவுக்கு வந்து, கர்ப்பிணிகளின் பசி ஆர்வம் அதிகரிக்கும்.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்: கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவின் எடை, அவர்தம் உடலில் உள்ள சிறுநீர்ப்பை மீது அழுத்தத்தை ஏற்படுத்தும்; இதன் காரணமாக கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் விதமான உணர்வு ஏற்படும்.
  • தூக்கம் இன்மை: கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் அவர்களில் தூக்கமின்மையை ஏற்படுத்தி விடும்.
  • உடலில் நீர்க்கட்டு/ நீர் வீக்கம்: உடலில் நீர் அதிகம் சேர்ந்து தேங்குவது, கர்ப்பிணிகளின் பாதம், கை மற்றும் முகத்தில் நீர் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
  • ஈறுகளில் இரத்தம் வழிதல்: கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அவர்தம் பல் ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தலாம்.

மேற்கூறிய இந்த அறிகுறிகளை தவிர, கர்ப்பிணி பெண்கள் இதர உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை – சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஐந்து மாத காலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள்

கர்ப்பிணிகள் சந்திக்கும் சில முக்கிய உடலியல் மாற்றங்கள் ஆவன:

  • வளரும் வயிறு: இந்த கால கட்டத்தில், வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கும் மற்றும் இது தோல் நீட்சியடைவது போன்ற உணர்வையும், அரிப்பு உணர்வையும் ஏற்படுத்தலாம்.
  • மார்பகங்கள் பெரிதாகும்: கர்ப்பிணிகளின் மார்பகங்களில் குழந்தைக்கான பால் உற்பத்தி தொடங்கும் மற்றும் மார்பகங்கள் முழுதாக நிரம்பி, பெரிதாக காட்சி அளிக்கும்.
  • கொலஸ்ட்ரம் எனும் சீம்பால்: கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு, புதிதாக தாயான அவர்தம் மார்பக முலைக்காம்பில் இருந்து ஒரு மஞ்சள் நிற திரவம் வெளியேறும்; இது தான் குழந்தைக்கு தரப்படும் முதல் தாய்ப்பால் அதாவது சீம்பால் ஆகும்.
  • வரித்தழும்புகள்: கருவறையில் குழந்தை வளர்வதால், பெரிதாகும் கருவறை காரணமாக கர்ப்பிணிகளின் சருமத்தில் கிழிசல்கள் ஏற்பட்டு, வரித்தழும்புகள் உருவாகலாம்.
  • லீனியா நிக்ரா: தொப்புளில் இருந்து கீழாக, அடர்ந்த ஒரு கோடு போன்ற அமைப்பு கர்ப்பிணிகளின் வயிற்றில் உருவாகலாம்.
  • அடர்ந்த நிறம் கொண்ட முலைக்காம்பு மற்றும் அதை சுற்றிய பகுதி: மார்பகத்தின் முலைக்காம்பு மற்றும் அதை சுற்றிய பகுதிகளின் நிறம் அடர்ந்து காணப்படலாம்.

ஐந்து மாத காலத்தில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வ மாற்றங்கள்

கர்ப்பிணிகள் சந்திக்கும் ஒரு சில உணர்வுப்பூர்வ மாற்றங்கள் ஆவன:

  • மனநிலை மாற்றங்கள்: கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், கர்ப்பிணிளுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம்.
  • அழுத்தம்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலை மற்றும் குழந்தை பிறந்த பின், எப்படி ஒரு நல்ல பெற்றோராக இருக்கப்போகிறோம் என்ற கவலை போன்றவற்றால் கர்ப்பிணிகளுக்கு மனஅழுத்தம் உருவாகலாம்.
  • கர்ப்பகால மறதி: கர்ப்பமாக இருக்கும் பொழுது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், அடிக்கடி மறதி உண்டாகலாம்.

இந்த மாதத்தில் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி மேம்படும்; குழந்தையின் வளர்ச்சி எப்படி மேம்படும் என்று அறிவதில் ஆர்வமாக உள்ளீர்களா? அப்படியெனில், தொடர்ந்து படியுங்கள்.!

ஐந்து மாத கால கர்ப்பத்தில் ஏற்படும் குழந்தையின் வளர்ச்சி

கர்ப்பத்தின் ஐந்து மாத காலத்தில், அதாவது 17 முதல் 20 வார கால கட்டம் நடப்பில் இருக்கும் (5). கர்ப்பத்தின் இந்த கால கட்டத்தில், கருவறையில் இருக்கும் குழந்தை டர்னிப் எனும் சிவப்பு முள்ளங்கி வகை கிழங்கு அளவில் இருந்து ஒரு வாழைப்பழம் அளவிற்கு வளர்ந்துவிடும் (6).

குழந்தையின் எடை (7): 5 முதல் 10 அவுன்ஸ்கள் அளவு இருக்கும் (140 – 300 கி)

குழந்தையின் உயரம்: 5.1 – 10 அங்குலம் (CRL) (13 – 25.6 செமீ (CRL)) எனும் அளவை 17 ஆவது முதல் 20 ஆவது வாரத்திற்குள் குழந்தை எட்டிவிடும். 20 ஆவது வாரத்தில் இருந்து, உயரம் தலையிலிருந்து பின்புட்டப்பகுதி வரை அளவிடப்படும்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் ஐந்தாம் மாதத்தில் குழந்தை எவ்வாறு வளரும் என்பதை இங்கு காணலாம் ( 8, 9, 10):

உடல் பாகங்கள்வளர்ச்சி
தோல்வெர்னிக்ஸ் கேசோசா, இது ஒரு க்ரீஸ் வகை பொருள். சருமத்தை உள்ளடக்கி மற்றும் அதை பாதுகாக்கிறது.
தலை முடிதலையில் முடி வளர தொடங்கும்
லானுகோ (கருவின் மீதும் பிறந்த குழந்தையின் மீதும் இருக்கும் மென் மயிர்)குழந்தையின் உடலை மூடியிருக்கும் மென்மையான மயிர்
கண்கள்புருவம், இமை முடிகள் மற்றும் கண் இமைகள் போன்றவை தோன்ற தொடங்கும்
இதயம்இதய துடிப்பு சர்க்காடியன் ரிதம்ஸ் எனப்படும் தினசரி சுழற்சியைப் பின்பற்றுகிறது.
குரல் வளைமுதிர்ச்சியடைய தொடங்கும்
காதுகாதின் கோக்லியா முழுமையாக வளர்ந்திருக்கும் மற்றும் கருவிற்கு கேட்கத் தொடங்குகிறது.
பிறப்புறுப்புகள்பெண் குழந்தைகளில், கருப்பைகள் கிட்டத்தட்ட 7 மில்லியன் அளவுள்ள ஓகோனியாக்களை வளர்ச்சியடைய செய்யும், இவை ஆரம்ப கால ஒகோசைட்களை உருவாக்க தொடங்கும்
நரம்புகள்நரம்புகள், மையலின் எனும் திசுவால் சுற்றி மூடப்படும்
விரல்கள்கை விரல்களில் ரேகைகள் உருவாகி வளரத் தொடங்கும்

வயிற்றில் முதன் முதலாக குழந்தையின் அசைவை உணர்வதில் கிடைக்கும் இன்பம் மிகவும் அலாதியானது! இந்த மாதத்தில் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கருவறையினுள் என்ன நடக்கும் என்று இங்கு படித்தறியுங்கள்.

ஐந்தாம் மாத காலத்தில் குழந்தையின் நிலை மற்றும் இயக்கங்கள்

நிலை:

கருவறையில் குழந்தை நகன்று இடம் பெயர, நிறைய இடம் இருக்கும்; ஆகையால், இந்த மாதத்தில் குழந்தை இப்படி தான் இருக்கும் என்று ஒரு நிலையை குறிப்பிட்டு கூற முடியாது.

இயக்கம்: இந்த காலகட்டத்தில், குழந்தையின் இயக்கங்களை இலேசாக உணர முடியும்; வயிற்றில் படபடப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனை உயிர்ப்பித்தல் என்று கூறுவர்; முதன் முறையில் கர்ப்பிணிகளால், குழந்தையின் இந்த இயக்கத்தை உணர முடியாமல் போகலாம் மற்றும் அவர்கள் இதை வயிற்றில் இருக்கும் வாயுவினால் ஏற்படும் உணர்வு என்றும் கருதலாம் (11).

சரியான உணவை, சரியான நேரத்தில் உண்பது ஆரோக்கியமான குழந்தையை பெற உதவும்; மேலும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும். இது மட்டுமில்லாமல், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆரோக்கியம் தரும் உணவுகளை எப்படி தேடி உட்கொள்ள வேண்டுமோ, அதே போல் சில குறிப்பிட்ட உணவு வகைகளை விலக்கியும் வைக்க வேண்டும்; கர்ப்பிணிகள் உண்ணக்கூடாத உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

ஐந்து மாத கால கர்ப்பத்திற்கான உணவு முறை

கர்ப்பிணிகள் கட்டாயமாக தங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன (12):

  • கர்ப்பிணி பெண்கள், அதிக அளவு பச்சை இலை காய்கறிகள், பிரட், பால், மத்தி மீன் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த வலுவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இது கருவில் வளரும் சிசுவின் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ACOG -இன் கருத்துப்படி, ஒரு கர்ப்பிணி பெண் ஒரு நாளைக்கு 1000மிகி அளவு கால்சியத்தை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இரத்த சிவப்பு செல்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து பெரிதும் உதவும்; ஒரு நாளைக்கு 27மிகி என்பது தான் பரிந்துரைக்கப்பட்ட இரும்புச்சத்து அளவு ஆகும் (சப்ளிமெண்ட்டுகள் உட்பட). முழு தானிய பொருட்கள், மீன், பச்சை இலை காய்கறிகள், உலர்ந்த பழங்கள், பீன்ஸ், குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்ற உணவுகளில், குறிப்பிடத்தக்க அளவு தாதுக்கள் நிறைந்துள்ளன; இவற்றை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
  • ACOG -இன் கருத்துப்படி, ஒரு கர்ப்பிணி ஒரு நாளைக்கு 600மிசெகி அளவுள்ள ஃபோலிக் அமில சத்தை உட்கொள்ள வேண்டும்; இது குழந்தைகளில் மூளை மற்றும் முதுகுத்தண்டு சார்ந்த அறிவாற்றல் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்க உதவும். அதிக அளவு பச்சை இலை காய்கறிகள் (கீரை, ப்ரோக்கோலி, ரோமைன் லேட்டஸ் எனும் இலைக்கோசு, காலே எனும் பரட்டைக்கீரை), சிறுநீரக பீன்ஸ்கள், பருப்புகள், கடலைகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை கர்ப்பிணிகள் தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தி, கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் டி உதவுகிறது; சாலமன் மீன் மற்றும் வைட்டமின் டி சத்து சேர்த்து வலுவூட்டப்பட்ட பால் போன்றவை வைட்டமின் டி சத்தை பெற உதவும் நல்ல ஆதாரங்கள் ஆகும். ஒரு நாளைக்கு 600 IU என்ற அளவில் வைட்டமின் டி சத்தினை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
  • வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் (இனிப்பு உருளைக் கிழங்குகள் அல்லது கேரட்கள்), பச்சை இலை காய்கறிகள், கல்லீரல் இறைச்சி மற்றும் பால் போன்ற உணவுகளை கர்ப்பிணி பெண்கள் தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 750-770மிசெகி என்ற அளவில் இச்சத்தை எடுத்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்தை மற்றும் கண் பார்வை ஆரோக்கியத்தை பலப்படுத்தும்
  • புரதச் சத்தினை கொழுப்பு குறைந்த இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, கடல் உணவு, பட்டாணி, சோயா பொருட்கள், பீன்ஸ், பால், உப்பு சேர்க்காத விதைகள் மற்றும் பருப்புகள் போன்றவற்றில் இருந்து பெறலாம். இது தசை மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்
  • வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், தக்காளிகள் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; இது ஆரோக்கியமான ஈறுகள், பற்கள் மற்றும் எலும்புகளை பெற உதவும். ஒரு நாளைக்கு சராசரியாக 85மிசெகி என்ற அளவில் வைட்டமின் சி சத்தினை எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

ஐந்து மாத கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்:

  • பச்சையான அல்லது சமைக்கப்படாத உணவுகளில் இருந்து தள்ளி இருங்கள்; ஏனெனில் இவ்வகை உணவுகளால் லிஸ்தீரியோசிஸ் எனப்படும் உணவுப்பொருள் நோய் ஏற்படலாம் (13).
  • ராஜா கானாங்கெளுத்தி, வாள் மீன், ஓடு மீன் மற்றும் சுறா மீன் போன்ற மீன் வகைகளை தவிர்க்கவும்; ஏனெனில் இவற்றில் அதிக அளவு மெர்க்குரி சத்து நிறைந்து இருக்கும்.
  • 200-300மிகி என்ற அளவிற்கு அதிகமாக காஃபின் கொண்ட பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்; மீறி அருந்தினால் கருக்கலைப்பு ஏற்படலாம் (14).
  • பதப்படுத்தப்படாத பால் மற்றும் வெண்ணெயை தவிருங்கள்
  • செலியாக் நோய் கொண்ட கர்ப்பிணிகள் குளூட்டன் கொண்ட உணவுகளான கோதுமை மற்றும் பார்லி போன்ற உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும் (15). இவ்வுணவுகளுக்கு பதிலாக காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், கோழி இறைச்சி மற்றும் இறைச்சி வகைகளை உட்கொள்ளலாம்.
  • ஆழ்ந்து வறுக்கப்பட்ட மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இவற்றால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

இந்த காலகட்டம் தான் மருத்துவருடன் கலந்தாய்வை உறுதி செய்து, மருத்துவரை சென்று காண வேண்டிய நேரம்; மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டிய காலம்; இவ்வாறு செய்வதனால் கர்ப்பிணிகளின் நலம் மற்றும் கருவின் நலம் ஆகிய இரண்டை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

மகப்பேறு மருத்துவருடனான கலந்தாய்வில் எதிர்பார்க்க வேண்டியது என்ன?

இம்மாத காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில பரிசோதனைகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

உடலியல் ஆய்வுகள்:

  1. இரத்த அழுத்த சோதனை
  2. எடை சோதனை
  3. புரதம் மற்றும் சர்க்கரை அளவுகளுக்கான சிறுநீர் சோதனை.
  4. அடிப்படை உயரத்தின் அளவீட்டு சோதனை

மற்றவை:

  1. அல்ட்ரா சவுண்ட்: இச்சோதனை பின்வருவனவற்றிற்காக செய்யப்படுகிறது,
  • கருவின் இதயத்துடிப்பு மற்றும் எடை & CRL(crown-rump length) தரவுகளை கொண்டு குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க உதவுகிறது
  • குழந்தையின் நிலை மற்றும் நஞ்சுக்கொடியின் நிலையை பரிசோதிக்கவும்
  • இந்த ஸ்கேன் பரிசோதனையை அனமோலி ஸ்கேன் என்று அழைப்பர் (16).
  1. பல்வேறு மார்க்கர் சோதனை: கீழ்கண்டவற்றுடன், அன்னையின் இரத்த அளவுகளை கண்டறிய இரத்த மாதிரி சோதனையும் இதில் அடங்கும் (17);
  • ஆல்பா கரு புரதம் (Alpha-fetoprotein – AFP) –  தாயின் இரத்த திரவத்தில் இருக்கும் அசாதாரண AFP புரத அளவுகள் கீழ்கண்டவற்றை குறிக்கும்:
    • டவுன் நோய்க்குறி
    • திறந்த நரம்பு குழாய் குறைபாடுகள் (ONTD), ஆசினா பிஃபிடா போன்றவை
    • கருவின் அடிவயிற்றின் சுவரில் குறைபாடுகள்
    • வேறு சில குரோமோசோம் ரீதியான அசாதாரணங்கள்
    • கர்ப்ப காலம் முழுவதும் புரத அளவு வேறுபடுவதால், சரியான தேதியில் ஏற்படும் தவறான கணக்கீடு
    • ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் புரதத்தை உருவாக்குகின்றன
  • எச்சிஜி (hCG) –இது நஞ்சுக்கொடியால் உற்பத்தி செய்யப்படும் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் ஹார்மோன் ஆகும்.
  • எஸ்டிரியோல் – இது நஞ்சுக்கொடியால் தயாரிக்கப்படுகிறது
  • இன்ஹிபின் – இது நஞ்சுக்கொடியால் தயாரிக்கப்படுகிறது

சில நேரங்களில் திருப்தியற்ற பல குறிக்கும் சோதனை முடிவுகள் கிடைக்கும் போது, ​​ஒரு துல்லியமான நோயறிதலுக்காக அம்னோசென்டெசிஸ் பரிந்துரைக்கப்படும்.

  1. பனிக்குடத் துளைப்பு: ஸ்பைனா பிஃபிடா மற்றும் குரோமோசோமல் கோளாறுகள் போன்ற திறந்த நரம்பியல் குழாய் குறைபாடுகளை (ONTDs) சரிபார்க்க இந்த சோதனை செய்யப்படுகிறது. பனிக்குட திரவ மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, சோதனை முடிவுகள் கணக்கிடப்படுகின்றன. இரட்டையர்கள் அல்லது பல குழந்தைகள் உருவாகி இருந்தால், அந்நேரங்களில் ஒவ்வொரு பனிக்குடத்திலும் இருந்து தனித்தனியாக மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நிகழ்த்தப்படும்.

சோதனை முடிவுகளில் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் காணப்பட்டால், அது ஏதேனும் நோய்க்குறைபாடாக இருக்கலாம்; எனவே உடனடியாக மருத்துவரை சென்று காண வேண்டியது அவசியம்.

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது என்ன?

கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் (18, 19):

 

  • பிறப்புறுப்பு யோனி இரத்தப்போக்கு
  • தொப்பை அல்லது இடுப்பு வலி அல்லது கடுமையான தசைப்பிடிப்பு
  • 4 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல், குளிர் காய்ச்சல்
  • மிகுந்த வலி அல்லது குறைவான சிறுநீர் கழித்தல்
  • அடர் நிற சிறுநீர்
  • 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அல்லது மோசமாகிவிடும் வாந்தி
  • தலைச்சுற்றல்
  • அதிக துர்நாற்றம் வீசும் யோனி வெளியேற்றம் அல்லது மோசமான மணம் கொண்ட பிறப்புறுப்பு வெளியேற்றம்

அசாதாரண அறிகுறிகளை குறித்து அதிகம் எண்ணி பார்க்க வேண்டாம்; அது கர்ப்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை மேலும் பெரிதாக்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மேலும் படித்து அறியுங்கள்!

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் ஏற்படும் சிக்கல்கள்

இந்த மாத கால கர்ப்பத்தில் ஏற்படும் சிக்கல்களில் கருக்கலைப்பு அல்லது குழந்தை இறந்து பிறத்தல் போன்றவை அடங்கும் ( 20, 21, 22).

கருக்கலைப்பு: கர்ப்ப காலத்தில் ஏற்படும் இழப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் மற்றும் கருக்கலைப்பு என்பது 20 ஆவது வாரத்திற்கு முன்பாக கூட ஏற்படலாம். இதன் அறிகுறிகள் ஆவன:

  • யோனி இரத்தப்போக்கு
  • அடிவயிற்றில் வலி அல்லது பிடிப்புகள்
  • கீழ் முதுகு வலி/ இடுப்பு வலி
  • திசுக்கள், திரவங்கள் அல்லது யோனி வழியாக செல்லும் உறைவு போன்ற பொருள்

குழந்தை இறந்து பிறத்தல்: குழந்தை இறந்து பிறத்தல் என்பது 20 ஆவது வாரத்தில் அல்லது அதற்கு பின்பு கூட நேரிடலாம்; கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் அல்லது பிறப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்படலாம்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், சுகமான கர்ப்ப காலத்தை மேற்கொள்ள வேண்டிய தகவல்களை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஐந்தாம் மாத காலத்தில் கர்ப்பிணிகள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆவன:

  • மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
  • நீரச்சத்துடன் இருங்கள்.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
  • போதிய அளவு உடலுக்கு ஓய்வு கொடுங்கள்.
  • வாய்வழி சுகாதாரத்தை பேணுங்கள்.
  • உட்கார்ந்திருக்கும் போது சரியான நிலையைப் பராமரிக்கவும், அது ஆழ்ந்த மற்றும் வசதியான தூக்கத்தை பெற உதவும். திடீரென உட்காரவோ அல்லது எழுந்து நிற்கவோ வேண்டாம்; ஏனெனில் இதனால் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும் (23).
  • கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய வைட்டமின்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • கனமான பொருட்களை தூக்க வேண்டாம்.
  • சிறிய அளவு உணவுகளை, சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள்.
  • மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எவ்வித மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
  • இடுப்பு தசைகளை வலுப்படுத்தும் நடைபயிற்சி மற்றும் கேகல் உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கவும்.
  • தளர்வான, சுவாசிக்கக்கூடிய ஆடைகள் மற்றும் வசதியான தட்டையான பாதணிகள் போன்றவற்றை அணியுங்கள்.
  • தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து விலகி இருங்கள்.

கர்ப்பிணி பெண்கள் மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருந்தாலும், அவர்களது துணை அளிக்கும் அன்பும், ஆதரவும், உதவியும் மிகவும் அவசியமானது. அடுத்த பத்தியில் புதிய தந்தையர்களாக மாறவிருக்கும் நபர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

புதிய தந்தையர்களுக்கான குறிப்புகள்

  • அன்றாட வேலைகளை செய்வதில், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உதவி செய்யுங்கள்
  • உங்கள் மனைவிக்காக, வீட்டில் அமைதியான – சந்தோஷாமான சூழலை உருவாக்குங்கள்
  • கர்ப்ப கால மருத்துவ பரிசோதனைகளுக்கு, உங்கள் துணையுடன் செல்லுங்கள்
  • வாழ்க்கைத்துணையுடன் வெளியே செல்ல திட்டமிடுங்கள்
  • மகப்பேறு பொருட்களை வாங்க, துணையுடன் வெளியே செல்லுங்கள்
  • துணைக்கு பாதம் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்து விடுங்கள்

கர்ப்ப கால பயணம் என்பது ஒரு ரோலர் கோஸ்டர் இராட்டினம் போன்றது; அதில் ஏற்ற இறக்கங்கள் நேரிடலாம். இவ்வித ஏற்ற இறக்கங்களை கண்டு கர்ப்பிணிகள் மிரளாமல் இருந்து, தைரியமான மனோபாவத்துடன் கர்ப்ப கால சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் மனதை அமைதியாக வைத்து ஓய்வெடுத்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு முடிந்த அளவு நற்பண்புகளை கற்றுக்கொடுக்க முயலுங்கள் மற்றும் குழந்தைக்கு மகிழ்ச்சியான சூழல் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்ப காலம் முடிந்து, குழந்தை பிறந்து அதை கையில் வாரி எடுக்கும் அந்த ஒரு நொடியில் கர்ப்பிணிகள் சந்தித்த போராட்டங்கள் எல்லாம் மறந்து, அளவில்லா சந்தோசம் ஒன்று மட்டுமே அவர்களின் மனதில் ஏற்படும். ஆகவே குழந்தை மண்ணில் பிறந்து, உங்கள் கைகளில் தவழப்போகும் நாளுக்காக பொறுமையுடன், அமைதியான – நேர்மறையான மனநிலையுடன் காத்திருங்கள்!

Was this article helpful?
Like buttonDislike button
disqus_img

Community Experiences

Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.