மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் (மூளைக்காய்ச்சல்) ஒரு அரிதான, ஆனால் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நோய்

check_icon Research-backed

Image: iStock

மெனின்ஜைடிஸ் (மூளைக்காய்ச்சல்) என்றால் என்ன?

மூளை மற்றும் முதுகுத்தண்டு உடல் பாகங்களை மூடி இருக்கும் பாதுகாப்பு (மெனின்ஜெஸ் எனப்படும்) சவ்வுகளில் ஏற்படும் வீக்கமே, மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் என்பது ஆகும். மூளை மற்றும் முதுகு தண்டு வடத்தைச் சுற்றியுள்ள திரவத்தில், ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற கிருமிகளால் நோய் தொற்று ஏற்பட்டால், அவ்வுடல் பகுதிகளில் வீக்கம்1 ஏற்படுகிறது. இருப்பினும், இது பிற நோய் தொற்றுகளாலும், மருந்து, மாத்திரைகள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் போன்ற காரணிகளாலும் மூளைக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் (மூளைக்காய்ச்சல்) – ஒரு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நோய்

IMD (Invasive Meningococcal Disease) எனும் ஆக்கிரமிப்பு மெனிஞ்ஜோகாக்கல் நோய் என்பது ஒரு அரிதான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, நெசீரியா மெனின்ஜைடிஸ் எனும் தீய பாக்டீரியாவால் தோன்றக்கூடிய ஓர் தொற்று நோய் ஆகும். பொதுவாக இந்த நோய், மூளையில் ஏற்பட்ட நோய் தொற்று (மெனின்ஜிடிஸ்) மற்றும் / அல்லது இரத்தத்தில் ஏற்பட்ட நோய் தொற்று (செப்டிசீமியா அல்லது இரத்தத்தை விஷமாக்குதல்)2 போன்றவற்றால் ஏற்படுகிறது.

இன்றைய காலத்தில் இத்துணை மருத்துவ வசதிகள், தொழில்நுட்பங்கள் இருந்தும், இந்த நோய் தனி மனிதர்கள் மற்றும் அவர்தம் உறவுகளின்2 உடலில் உண்டான சில மணி நேரங்களில் மனிதர்களின் உயிரை பறித்துவிடும் அல்லது நீண்ட காலத்திற்கு மனிதர்களின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி அழித்து, பொருளாதார ரீதியிலும் அதிகம் செலவு செய்ய வைத்து – தனி மனிதர் மற்றும் அவர்தம் குடும்பத்திற்கு பொருளாதார அடிப்படையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி, மனிதர்களின் உயிரை கொல்லக்கூடியது3.

இந்த நோய் யாருக்கு ஏற்படும் என்று முன்கூட்டியே கணித்து கூற இயலாது; இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதிலும், உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த ஒரு நபருக்கும் ஏற்படலாம். ஏற்கனவே பல்வேறு நோய் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு, மற்றவர்களை காட்டிலும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகம் என்று கூறப்படுகிறது2. சில சமயங்களில் இந்த நோய் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள், நோய் தனது முதல் அறிகுறியை ஏற்படுத்தி உயிரை பறிக்கக்கூடிய தன்மை கொண்டதாக விளங்குகிறது4.

கடந்த 10 வருடங்களில், இந்தியாவில் 50,000 -ற்கும் மேற்பட்ட மக்கள் மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் குறைபாடு கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்; 3,000 -ற்கும் அதிகமான மக்கள் இந்த நோய் குறைபாட்டால் உயிர் இழந்து உள்ளனர்5.

பல்வேறு ஆய்வறிக்கைகளின் படி, 10 -க்கு 1 நபர் என்ற கணக்கில் இந்த நோய் தாக்கியதால், மக்கள் உயிரிழப்பதாகவும் மற்றும் 10-20% மக்கள் இந்த நோய் குறைபாட்டினால் தாக்கப்பட்டு, உடல் ஊனம், காது கேளாமை, தழும்புகள், மூளை பாதிப்பு6,7 என தீவிர பாதிப்பு அடைந்து, பாடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்..

மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய் குறைபாடு முக்கியமாக ஐந்து வயதிற்கும் கீழான குழந்தைகளையே அதிகம் பாதிக்கும்; மேலும் இந்த நோய் வயது வந்தோர், இளம் வயதினர் என யாரை வேண்டுமானாலும், உலகின் எந்த இடத்தில் இருக்கும், எந்த ஒரு நபரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பெரும்பாலும் மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய்தொற்று, எந்த நோய் குறைபாடும் இல்லாத ஆரோக்கியமான மனிதர்களையே அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது; குறிப்பாக, மிகவும் வயதான நபர்களில், முதியோர்களில் இந்த குறைபாடு ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது8.

நோய் ஏற்படுத்தும் அபாயகரமான காரணிகள்:

  • பலர் கூடி வாழும் சமூக அமைப்பினில் வாழ்தல் (உதாரணம்: மிலிட்டரி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகள்) அல்லது வருடத்திற்கு ஒரு முறை மெக்கா9 நோக்கி மக்கள் பயணிக்கக்கூடிய முஸ்லீம் புனித யாத்திரையான ஹஜ் போன்ற யாத்திரைகளில் – அதிகமான மக்கள் திரளும் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்
  • சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகள், HIV நோய் தொற்று உட்பட/ ஒரு சமரசமான நோய் எதிர்ப்பு அமைப்பு/ நோய் எதிர்ப்பு அணுக்களில் அல்லது காம்ப்ளிமெண்ட்டில் ஏற்படும் குறைபாடுகள்9
  • ஆப்பிரிக்காவில்9 இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களான சப் – சஹரன் பகுதிகளுக்கு பயணம் செய்வதாலும், இந்த நோய் தொற்று ஏற்படலாம்.

மெனின்ஜைடிஸ் நோயில் இருந்து பாதுகாத்து, தற்காப்பை வழங்கக்கூடிய அனைத்து வித தடுப்பூசிகள் குறித்த விரிவான விவரம்

மெனின்ஜைடிஸ் என்பது ஒரு தீவிர வியாதி ஆகும்; இது பாக்டீரியா, வைரஸ் மற்றும்/அல்லது வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது.

3 முக்கிய பாக்டீரியவால் ஏற்படக்கூடிய மெனின்ஜைடிஸ் நோயைத் தடுக்க, நோய் காரணிகளை தடுக்க உதவும் வகையில் ஒரு தடுப்பூசி, மருத்துவ உலகில் காணப்படுகிறது. மெனின்ஜைடிஸ் நோயை ஏற்படுத்தும் அந்த மூன்று முக்கிய பாக்டீரிய காரணிகள் ஆவன:

  • ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நியூமோனியா, இது நியூமோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய் குறைபாட்டினை ஏற்படுத்தக்கூடியது
  • ஹீமோபில்ஸ் இன்ஃபுளூயன்சா டைப் பி, இது ஹீமோபில்ஸ் மெனின்ஜைடிஸ் நோய் குறைபாட்டினை ஏற்படுத்தக்கூடியது
  • நெசீரியா மெனிஜடிடிஸ், இது மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய் குறைபாட்டினை ஏற்படுத்தக்கூடியது

உங்கள் குழந்தையை இந்த 3 முக்கிய, உயிர் கொல்லி பாக்டீரிய தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க – அந்நோயை தடுக்க, குழந்தை நல மருத்துவருடன் இந்த தடுப்பூசி குறித்து கலந்து உரையாடி, குழந்தைக்கு அந்த தடுப்பூசியை போடுவதற்கு முயலுங்கள்.

மெனின்ஜைடிஸ் நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்!

மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் நோய் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்பும், அதை குறித்த பயமும் சாலப்பெரியது; ஆனால், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவே. இந்த பேரழிவை ஏற்படுத்தும் நோய்க்கு எதிரான கூட்டணியில் இணைந்து, இந்த நோயை குறித்தும், இதன் பாதிப்புகளை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இந்த கட்டுரையை உங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து “மெனின்ஜைடிஸ் நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்!” என்ற விழிப்புணர்வை பரப்பி, பற்பல மக்களுக்கு உதவுவீராக.

மெனிஞ்ஜோகாக்கல் மெனின்ஜைடிஸ் பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

This article is issued in public interest by Sanofi Pasteur.

References:

1. Centers for Disease Control & Prevention, Accessed on May, 2019
2. Meningitis Research Foundation. What are meningitis and septicaemia? Accessed March 2019.
3. Wright C, Wordsworth R, Glennie L. Counting the cost of meningococcal disease. Pediatric Drugs. Volume 15, Issue 1, January 2013. Pages 49-58.
4. Thompson MJ et al. Clinical recognition of meningococcal disease in children and adolescents. Lancet. 2006 Feb 4367(9508):397403
5. Data from national health profile report 2007 – 2018, confirmed cases:
6. Centers for Disease Control & Prevention. Meningococcal disease – Diagnosis, Treatment, and Complications. Accessed February 2019.
7. Meningitis now. After-effects of septicaemia. Accessed February 2019.
8. Martinón-Torres, F. Deciphering the Burden of Meningococcal Disease: Conventional and Under-recognized Elements. Journal of Adolescent Health 59. Volume 59, Issue 1, March 2016. Pages 12-20.
9. CDC. Meningococcal disease – Medical conditions risk factors. Accessed February 2019.
10. Meningitis Research Foundation. What causes meningitis and septicaemia? Accessed in May 2019

The following two tabs change content below.

    LATEST ARTICLES