தாய்மை அடைதல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் சிறந்த புத்தகங்கள்

கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து போன இந்த நேரத்தில் மன வருத்தம் காரணமாகவோ பணி நிமித்தம் காரணமாகவோ தம்பதியினர் பெரும்பாலும் பெரியவர்களிடம் இருந்து சற்று தூரத்தில் வாழ வேண்டிய அவசியங்கள் ஏற்படுகின்றன. சரியான உதவிக்குறிப்புகள் இல்லாமல் இன்றைய பெற்றோரும் தவிக்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் பாலம் போல உதவுவதுதான் புத்தகம். தாய்மை அடைதல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சில புத்தகங்கள் உதவுகின்றன. அவற்றில் மிக சிறந்த புத்தகங்களை MOMjunction உங்களுக்காக வழங்குகிறது.

In This Article

1. ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

guide to a healthy pregnancyகர்ப்பமடைதல் என்பது மறுஜென்மம் எடுப்பது போல அவ்வளவு சிரமங்களும் சிக்கல்களும் இருக்கிறது. ஒரு பெண் தாய்மையடையும் தருணத்தில் பல மனப்போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது உடல் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை ஒரு மருத்துவரால் இன்னும் மிக சரியாக சொல்ல முடியும் என்பதாலோ என்னவோ மருத்துவர் கீதா அர்ஜுன் இந்த புத்தகத்தை தானே எழுதி வெளியிட்டு இருக்கிறார். அதுவே இந்த புத்தகத்தின் சிறப்பு எனலாம். 

2. கர்ப்ப கால குறிப்புகள்

Pregnancy Tipsஇந்த  புத்தகத்தை எழுதியவர் ருஜூதா திவேகர். கர்ப்பம் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான பதில் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.கர்ப்பமானவர்களுக்கு அவசியமான உணவு, உடற்பயிற்சி பிரசவத்திற்கு பின்பான குறிப்புகள் எல்லாம் இந்த புத்தகத்தில் இருக்கிறது. கர்ப்பமடைவதற்கு முன்கூட்டியே தங்களை தயார் செய்து கொள்ள வேண்டியவர்கள் அவசியம் இந்த புத்தகத்தை வாங்கலாம். 

3. சுக பிரசவம்

Deliveryஇந்த புத்தகத்தின் பெயரே படிப்பவருக்கு அவ்வளவு நம்பிக்கை தருகிறது. அதைப்போலவே உள்ளே எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் ஒரு கர்ப்பிணிக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களையும் போக்குகிறது. இந்த புத்தகத்தை எழுதியவரும் மலடுநீக்கு சிறப்பு மருத்துவர் என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம். இதற்கு மேலும் நீங்கள் யோசிக்க வேண்டாம். இந்த புத்தகம் இலவசமாக அமேசான் கிண்டில் எடிஷனில் கிடைக்கிறது. 

4. கர்ப்பம் முதல் பிரசவம் வரை

From pregnancy to childbirthகரு உருவான நாளில் இருந்து பிரசவம் முடியும் வரையும் முடிந்த பின்னும் பெண்ணுக்குள் ஏற்படும் ஒவ்வொரு சின்ன சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் ஆசிரியர் ஜெ. புவனேஸ்வரி. கேள்வி பதில் வடிவில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருப்பது வாசகர்களின் மனதிற்கு தெளிவை தருகிறது. அமேசான் கிண்டில் எடிஷனில் இந்த புத்தகம் கிடைக்கிறது. 

5. கரு முதல் குழந்தை வரை 

From fetus to babyஇந்த புத்தகத்தை எழுதியவரும் ஒரு மருத்துவர் தான். டாக்டர் ஜெயராணி காமராஜ் தன்னுடைய மருத்துவப்படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர். இவர் கணவர் மருத்துவர் காமராஜ் உடன் இணைந்து குழந்தை இன்மை மற்றும் பாலியல் பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்கி வருகிறார்.இந்த புத்தகமும் கேள்வி பதில் வடிவில் இருப்பதால் வாசகரின் புரிதல் சிறப்பானதாக இருக்கும்.இந்த புத்தகம் கிண்டில் எடிஷனில் வெளியாகி இருக்கிறது.

6. கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் 

Diet and dietary methodsஇந்த புத்தகத்தை மருத்துவர் ஜெயராணி காமராஜ் எழுதி இருக்கிறார். கர்ப்பிணிகள் என்ன விதமான உணவுகளை உண்ணலாம் என்பது எப்போதுமே கர்ப்ப காலத்தில் இருக்கும் பெரும் சந்தேகம் ஆகும். இந்த புத்தகத்தில் கர்ப்பம் அடைவதற்கு என்ன மாதிரியான உணவு சாப்பிடலாம் என்பதில் தொடங்கி உணவை வெறுக்க வைக்கும் தாய்மை முதல்கொண்டு அனைத்து விதமான சந்தேகங்களையும் தீர்க்கிறது.கிண்டல் எடிஷனில் கிடைக்கிறது.

7. கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்

What pregnant women can eatகர்ப்பம் ஆரம்பிக்கும் போதும் ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலத்திலும் மற்றும் பிரசவத்திற்கு பின்பு பாலூட்டும் காலத்திலும் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்பதால் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் உடல் நலத்துக்கான முழுமையான கையேடு இது எனலாம். 

8. பிரசவ கால பாதுகாப்பு

Childbirth coverageகர்ப்பம் குறித்த பயம் அனைவரிடமும் இருக்கும். அவர்களது மன இறுக்கத்தை போக்கும் வகையில் பல புத்தகங்களை எழுதி இருக்கும் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தனது கணவருடன் இணைந்து இந்த புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார். சுலபமான முறையில் குழந்தை பேறு அடைய இந்த புத்தகம் உதவுகிறது. 

9. இனி எல்லாம் சுகப்ரசவமே

Everything is no longer a pleasureஇனி எல்லாம் சுகமே என்பதன் இன்னொரு பாணியாக இந்த புத்தகத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் ரேகா சுதர்சன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் சிசேரியன் குழந்தைகளாக இருக்கும் இந்த காலத்தில் சுகப்ரசவத்துக்காக ஏங்கும் தாய்மார்களுக்காகவே இந்த புத்தகம் வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகம் அவள் விகடனில் எழுதப்பட்ட தொடர் கட்டுரையின் மொத்த வடிவம் என்பது இதன் சிறப்பு 

10. தாய்மை அடையும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Steps to follow when reachingஹெய்டி மர்கோப் மற்றும் ஷேரன் மேசல் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் இந்த புத்தகம். கடந்த 25 வருடங்களில் இந்த புத்தகம் மிக சிறந்த புத்தகமாக கருதப்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது.

கர்ப்பமான நேரங்களில் புத்தகம் படிப்பது எவ்வித உதவி செய்யும்

பெண்கள் கர்ப்பமான நேரம் முதல் பிரசவம் முடியும் வரை பலவிதமான உடல் சிக்கல்களுக்கும் மன தவிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். என்னதான் பெரியவர்கள் அருகில் இருந்தாலும் மருத்துவர்கள் உதவி செய்தாலும் அவர்களால் முழுமையான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் போகலாம். அவர்களை உளவியல் ரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்ய புத்தகங்கள் மிகவும் உதவி செய்கிறது. தவிர அவ்வப்போது ஏற்படும் சின்ன சின்ன சந்தேகங்களை கையேடுகள் உடனுக்குடன் தீர்த்து வைக்க உதவுகின்றன 

முடிவுரை

தாய்மை அடைய இருக்கும் அடைந்திருக்கும் பெண்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். வேண்டிய கர்ப்ப கால உதவிகளை இந்த புத்தகங்கள் தந்தாலும் முறையான மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும் தவறாதீர்கள்.

Was this article helpful?
Like buttonDislike button
disqus_img

Community Experiences

Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.