குழந்தைகளைக் குறி வைக்கும் கொரோனாவின் மூன்றாவது அலை ... எப்படிக் காப்பாற்றுவது ?

கொரோனாவின் இரண்டாவது அலையே இன்னும் பாதிப்புகளில் இருந்து குறையாத நிலையில் மூன்றாவது அலை வரலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. இன்னமும் அது இந்த மாதங்களில் வரலாம் எனக் கணிக்க முடியவில்லை. இருப்பினும் கொரோனாவின் மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (corona third wave).

அந்த சமயத்தில் உருமாறியுள்ள கொரோனாவுக்கு ஏற்ப தடுப்பூசிகள் கிடைக்குமா என்பது முதற்கொண்டு பல விஷயங்கள் சிக்கலாக இருக்கின்றன.மூன்றாவது அலை குறித்த சில எதிர்பார்ப்புகளும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் இப்போது பார்க்கலாம் corona precautions for kids.

In This Article

கொரோனாவின் மூன்றாம் அலை

The third wave of the corona pinit button

Image: IStock

இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கொரோனா உருமாறிக் கொண்டே செல்வதால் இதன் பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனாவின் உருமாற்றம் வேகமாக இருப்பதாலேயே மூன்றாவது அலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது (corona second wave).

முதல் அலையில் கொரோனா நுரையீரலை முழுமையாக அழிக்க 10 முதல் 12 நாட்கள் வரை எடுத்துக் கொண்டது. இரண்டாவது அலையில் அதன் உருமாற்றம் காரணமாக 5 முதல் 7 நாட்களே நுரையீரலை முழுமையாக சிதைக்க போதுமானதாக இருக்கிறது. மூன்றாவது அலையில் கொரோனாவின் உருமாற்றம் மேலும் வீரியமாகும் போது 2 அல்லது 3 நாட்களுக்குள் நுரையீரல் முழுச் சேதத்தை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது (corona mutation) .

கடந்த வாரங்களில் ஆந்திராவில் காணப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் B.1.617 என்கிற வகையைச் சார்ந்தது. இதனால் 2 முதல் 3 நாட்களில் மக்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்த உருமாற்றமானது கொரோனாவின் முதல் அலையை விட 15 மடங்கு அதிகமானது.

யாரெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது

Everyone is likely to be affected pinit button

Image: IStock

கொரோனாவின் முதல் அலையில் வயதானவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளானார்கள் (covid 19 first wave). இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு இன்னமும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களைக் காப்பது என்பது முழுக்க முழுக்க பெரியவர்களாகிய பெற்றோர்களின் கைகளில் தான் இருக்கிறது. எனவே மூன்றாவது அலையில் இருந்து உங்கள் குழந்தைகளை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பார்க்கலாம் ( how to take care of your children from corona) .

பொதுவாக இப்போதும் கூட ஆங்காங்கே குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து போன அந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. கவனமாக இருப்பது மட்டுமே நம் கைகளில் இப்போது கொடுக்கப்பட்டுள்ள ஒரே வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குழந்தைகளைக் கொரோனாவில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

What to do to protect children from corona pinit button

Image: IStock

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆக்சி மீட்டர் கட்டாயமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக குழந்தைகளின் காய்ச்சல் அளவு 103 முதல் 104 வரை அதிகரித்தால் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆக்சி மீட்டர் மூலம் குழந்தைகளின் ஆக்சிஜன் அளவை சரிபார்த்து குறைந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி விட வேண்டும் (Remedies to avoid corona).

குழந்தைகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் கண்டிப்பாகக் காக்க வேண்டும் (kid affected by corona) . இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவித்தல் சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை அவசியமானது.

பள்ளிகள் இல்லாத இந்தக் காலங்களில் அவர்களை வீட்டிற்குள்ளேயே முடங்க வைப்பது என்பது முடியாது தான். இருப்பினும் வாரம் இருமுறை இதற்கு அனுமதிக்கலாம் (protocols for kids to avoid corona) .

அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஒன்று கூடி விளையாடுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. முடிந்த வரை சமூக இடைவெளியுடன் விளையாடக் கூடிய விளையாட்டு வகைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அடிக்கடி கைகளை சுத்தம் செய்யப் பழக்குங்கள். வியர்வைகளைத் துடைக்க டிஸ்யு பயன்பாட்டினைப் பழக்குங்கள்.

உணவு மற்றும் தடுப்பூசி

Diet and vaccination pinit button

Image: IStock

குழந்தைகளுக்குப் போட வேண்டிய பருவ காலத் தடுப்பூசிகள் இருப்பின் அதனைப் போட்டு அவர்களை வைரஸ் தொற்றுகளில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் உணவில் வைட்டமின் டி , வைட்டமின் சி , கால்சியம் மற்றும் ஜின்க் போன்றவை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் கண்டிப்புதான் குழந்தைக்கு பாதுகாப்பானது என்பதை மறந்து விடாதீர்கள். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சத்தான உணவுகள் தருவதும் அவர்களை நீரேற்றமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் உங்களுடைய பொறுப்பு (immune boosting foods for corona) .

பூண்டு லவங்கம் இஞ்சி ஆகியவற்றை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வாருங்கள். முடிந்தவரைக்கும் பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளி கடைபிடிப்பதன் மூலமும் அத்தியாவசியம் இல்லாமல் வெளியே செல்லாமல் இருப்பதன் மூலமும் தொற்று உங்களையும் உங்கள் குழந்தைகளையும் அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் மற்றவர்களும் பாதிக்காமல் இருப்பார்கள். தொற்றின் சங்கிலி உடையும்.

Was this article helpful?
Like buttonDislike button
disqus_img

Community Experiences

Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.