கொஞ்சி விளையாட குழந்தை இல்லையே என்கிற கவலையா.. டெஸ்ட் ட்யூப் பேபி - குழந்தையற்றவர்களுக்கான ஒரு வரப்பிரசாதம்

Image: Shutterstock

IN THIS ARTICLE

ஒரு குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய வரமாக வந்த கண்டுபிடிப்புதான் டெஸ்ட் ட்யூப் பேபி. இந்த முறையில் 40 வயதிற்கு மேற்பட்ட தம்பதிகள் கூட குழந்தை பெற முடியும் என்பதே இதன் சிறப்பு. இதனை பற்றி மேலும் பார்க்கலாம்.

டெஸ்ட் டியூப் பேபி என்பது கரு தங்காத பெண்ணின் உடலுக்கு வெளியில் இருந்தபடி கருவினை உருவாக்கி அதன் பின்னர் அதனை பெண்ணின் வயிற்றில் சேர்ப்பது எனலாம் (1). இதற்கு அறிவியல் இன்-விட்ரியால் உரமிடுதல் என கூறுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு 30 முதல் 60 சதவிகிதம் எனலாம். (2)

இதற்கு செலவு கொஞ்சம் அதிகம் ஆகும் என்பதால் நீங்கள் அதற்கான தயார் மனநிலையில் இருப்பது அவசியம்.

டெஸ்ட் ட்யூப் பேபி சிகிச்சை முறை

சோதனைக் குழாய் சிகிச்சை என்பது பெரும்பாலும் திருமணம் ஆகி 10 வருடங்களுக்கும் மேல் குழந்தை இல்லாதவர்களுக்காக வழங்கப்படுகிறது.

குழந்தை பெறுவதற்கு ப்ரீ இம்ப்ளாண்டேஷன் ஜெனெடிக் ஸ்க்ரீனிங்(PGS) இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVI), இண்ட்ராயூட்ரைன் இன்செமினேஷன் (IUI), இண்ட்ராசைட் டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் டிரான்ஸ்ஃபர் (ICSI), போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ((3),(4),(5),(6)).

டெஸ்ட் டியூப் குழந்தைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்

சோதனைக் குழாய் குழந்தை உருவாகும் படிநிலைகள் (7)

 • ஐவிஎஃப் முதலில் உங்களால் கரு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாவிட்டால், கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுவதற்கு சில கருவுறுதல் மருந்துகளை மருத்துவர்கள் உங்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.
 • உங்கள் உடல் செயற்கையாக கருத்தரிக்க வல்லது டெஸ்ட் ட்யூப் பேபியை சுமக்க உங்கள் கருவறையால் முடியும் என்பதை சில இரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற சில மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
 • கருமுட்டைகள் அறுவடை செய்யத் தயாரானதும், அதனை சேகரிக்கும் குழாய்களை வழிநடத்தும் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தி அவை கருப்பையிலிருந்து மீட்டெடுக்கப்படுகின்றன.
 • இதன்பின் கணவர் தனது விந்தணு மாதிரியை வழங்க வேண்டும், இது முட்டைகளுடன் இணைவதற்கு முன்பு தயார் செய்யப்படுகிறது.
 • ஐவிஎஃப் சிகிச்சை உங்கள் முட்டைகள் மற்றும் கணவரின் விந்தணுக்கள் ஒரு பெட்ரி டிஷில் இணைக்கப்பட்டு, கருத்தரித்தல் நடைபெறுகிறதா என்பதைப் பார்க்க சில நாட்கள் அங்கேயே வைக்கப்படும்.
 • ஒரு ஆரோக்கியமான கரு உருவான பின்னர் ஊசி அல்லது ஆய்வைப் பயன்படுத்தி, அந்தக் கருவானத்து உங்கள் கர்ப்பத்தில் கருத்தரிக்க இது உங்கள் வயிற்றில் வைக்கப்படுகிறது.

வாடகை தாய் மற்றும் டெஸ்ட் டியூப் பேபி இடையே உள்ள வேறுபாடுகள்

டெஸ்ட் டியூப் குழந்தை சிகிச்சையில் வெற்றி அடைய முடியாத தம்பதிகளுக்கு வாடகை தாய் முறை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெண்ணின் மருத்துவ நிலை கர்ப்பமாக இருப்பதற்கும், பிரசவிப்பதற்கும் சாத்தியமற்றது என்றாலும் ஆபத்தானது என்றாலும் வாடகை தாய் முறை பொருத்தமானதாக இருக்கலாம் (8).

தமிழகத்தை பொறுத்தவரை வாடகை தாய் முறையானது கீழ்க்கண்ட விஷயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. சென்னையில் உள்ள டெஸ்ட் டியூப் பேபி சென்டர், கருப்பை இல்லாதவர்கள் அல்லது கருப்பையை எடுத்தவர்கள் அல்லது மீண்டும் மீண்டும் கர்ப்பம் இழப்பு மற்றும் மீண்டும் மீண்டும் விட்ரோ கருத்தரித்தல் (ஐவிஎஃப்) உள்வைப்பு தோல்விகள் போன்றவையை சந்தித்தவர்கள் வாடகைத் தாய் முறையை பயன்படுத்தலாம் என்கிறது (9).

சோதனைக்குழாய் முறை கருவுறுதலுக்கு மருத்துவரை நாம் எப்படி தேர்ந்தெடுப்பது

ஐவிஎஃப் சிகிச்சையின் வெற்றி என்பது பெண்ணின் வயது, கருமுட்டைகளின் தரம், ஆணின் விந்தணுக்களின் தரம், பெண் கருப்பையின் தரம், பெண்ணின் கர்ப்ப சிக்கல்கள் மற்றும் பிரசவ சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

சிறந்த மருத்துவரை தேர்தெடுக்க நீங்கள் கீழ்கண்ட கேள்விகளை உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டி வரலாம்.

குழந்தையை பெறுவதற்கான என் வயது பெண்களுக்கு தேவையான முயற்சிகள் மற்றும் எனது கருவுறுதல் சுயவிவரம் என்ன?
என் போன்ற மருத்துவ வரலாறு கொண்ட பெண்கள் மூலம் நீங்கள் வெற்றிகரமாக செய்த டெஸ்ட் ட்யூப் பேபி பிரசவங்களின் எண்ணிக்கை என்ன?

இந்தக் கேள்விக்கான பதில்கள் உங்கள் மருத்துவரை நீங்கள் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். இருப்பினும் அனுபவம் கொண்ட மருத்துவரை நீங்கள் அணுகினாலும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது முக்கியம். சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சைக்கு உங்கள் மருத்துவர் காலம் தாழ்த்தலாம் . இதனால் நீங்கள் அவர் மீது நம்பிக்கை இழந்து அடுத்த மருத்துவரை பார்ப்பது உங்கள் குழந்தை இன்மை சிக்கலை அதிகமாக்கலாம்.

சாதாரண கர்ப்பம் போல திட்டமிட்டு இந்த சோதனை குழாய் குழந்தை உருவாகாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மருத்துவ வரலாறு, உடல் பருமன், கர்ப்ப பை வலிமை, வயது , உடல் குறைபாடு, மன சிக்கல்கள் என எல்லாவற்றையும் அறிந்து அதற்கேற்ற வாறு இதற்கு சிகிச்சை செய்வார்கள். இதுவே முறையான டெஸ்ட் ட்யூப் குழந்தை சிகிச்சை முறையாகும்.

ஐவிஎஃப் – டெஸ்ட் டியூப் குழந்தை சிகிச்சை

ஐவிஎஃப் சிகிச்சை முறையில் தம்பதியரிடமிருந்து வரும் முட்டை மற்றும் விந்தணுக்கள் ஒரு கண்ணாடி ட்யூபில் அனுமதிக்கப்படுகின்றன, எனவே இன் விட்ரோ கருத்தரித்தல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இந்தக் கண்ணாடி குழாயில் பெண்ணிலிருந்து பெறப்பட்ட கருமுட்டைகள் மீது ஆணின் விந்தணுக்கள் அடுக்கப்படுகின்றன. மற்றும் கரு உருவாக சரியான வெப்ப விகிதத்தில் உள்ள ஒரு இன்குபேட்டருக்குள் உகந்த சூழ்நிலையில் கருத்தரித்தல் செயல்முறை இயற்கையாகவே நிகழ்கிறது. இந்த செயல்முறை எளிமையான சொற்கள் மூலம் சோதனைக் குழாய் குழந்தை என்றும் கூறப்படுகிறது. இந்த சோதனைக் குழாய் சிகிச்சை இந்தியாவில் மிகவும் செலவு குறைந்ததாகும்.

விந்தணுக்களில் தரமான அல்லது கருமுட்டை அளவு குறைபாடு இல்லாத தம்பதியினருக்கு ஐவிஎஃப் வழங்கப்படுகிறது மற்றும் மனைவிக்கு பின்வரும் மருத்துவ நிலைமைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தாலும் அவர்களுக்கு IVF சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஐவிஎஃப் அல்லது டெஸ்ட் டியூப் குழந்தைக்கான அறிகுறிகள்

 • தடையுள்ள ஃபலோபியன் குழாய்கள்
 • பல தோல்வியுற்ற IUI கள்
 • பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)
 • கடந்த காலங்களில் இடுப்பு அழற்சி நோய் (பிஐடி)
 • எண்டோமெட்ரியோசிஸ் (லேசான)

போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அவர்களுக்கு IVF முறை சோதனை செய்யப்படுகிறது.

IVF எனப்படும் டெஸ்ட் ட்யூப் சிகிச்சை முறையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்

1.உடல் பருமன்

குழந்தையின்மை சிகிச்சைக்கு உடல் பருமன் சில சமயங்களில் காரணமாக அமைகிறது. உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையை நீங்கள் பராமரிப்பது உங்கள் குழந்தையின்மை சிகிச்சையை சுலபமாக்க உதவுகிறது. உங்கள் எடைக்கு ஏற்ப உங்களுக்குத் தரப்படும் மருந்துகளின் அளவும் அதிகமாகலாம். அதனால் மருத்துவ ஆலோசனையுடன் யோகா, உடற்பயிற்சி , டயட் மூலம் உங்கள் உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

2.உடல் ஆரோக்கியம்

குழந்தையின்மைக்கு சர்க்கரை னாய், தைராய்டு சிக்கல்கள் , ரத்த அழுத்தம் போன்றவையும் சில சமயங்களில் காரணமாகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மேற்கண்ட நோய்கள் கண்டறியப்பட்டால் அவற்றை குறைக்க முற்படுவதும் சிறப்பான குழந்தையை சுமக்க நீங்கள் தயார் செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

3.மன ஆரோக்கியம்

மனதில் எதிர்மறை சிந்தனைகளோடு நீங்கள் எந்த சிகிச்சை எடுத்தாலும் அதில் வெற்றி வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கும். எனவே உங்கள் மனநிலை நேர்மறையாக இருக்குமாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் உள்ளவர்களும் தம்பதிக்கு இந்த விஷயத்தில் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மனதைரியம் உண்டு பண்ண வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணி அழுத்தமும் இருக்கும். இதனுடன் மனச்சுமை சேரும்போது நிச்சயம் குழப்பமான மனநிலை உருவாகும். முதலில் பெண்ணின் கணவர் தன்னுடைய மனைவிக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அது ஒரு பெண்ணிற்கு யானை பலம் அளிக்கும்.

4.கருப்பை சிக்கல்கள் மற்றும் விந்தணு குறைபாடு

கருப்பையில் ஏற்படும் சிக்கல்களை முளையிலேயே களைந்து விடுதல் நன்மை தரும். முறையற்ற மாதவிலக்கு, தேவையற்ற கருச்சிதைவுகள்,சினைப்பை கட்டிகள், கருப்பை குழாய் வீங்குதல், கருப்பை குழாய் தொற்று போன்றவைக்கு உடனடியாக சிகிச்சை பெறுதல் நன்மை தரும். அதைப்போலவே ஆண்களும் விந்தணுக்குறைபாடுகளை நீக்க அவசியமான ஆரோக்கியமுறைகளை மருத்துவ ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

இவைகள் எல்லாம் முறையாக நடப்பின் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவது என்பது நூற்றுக்கு நூறு வெற்றி தரும் முறையாக மாறும். உலகின் ஆக சிறந்த பெற்றோராக உங்களாலும் ஆக முடியும். வாழ்த்துக்கள்.

References: